Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழா... உன் கதை என்ன?...யானை சிறுத்து கட்டெறும்பாய் ஆனதோ என்று கூறுவதும் மிகக் குறைவான உதாரணமாகும். மலையே தேய்ந்து மடுவாகி அதில் காட்டாற்று வெள்ளம் ஒடிக்கொண்டிருக்கிறது...இந்த உதாரணமே பொருத்தமானது...!
உலகில் இராட்சதர்கள் என்று இருந்ததாக பழைய வரலாறுகள் சொல்லுகிறது. பைபிளில் ஆதியாகமத்திலும் சொல்லப்படுகின்றது. அவர்களெல்லாரும் ஜலப்பிரளயம் வந்த போது அழிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவர்கள் நீக்ரோ இனத்தவர்களாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தவர்களும் கடையை மூடிவிட்டார்கள். இராமாயணத்திலும் கூட தென்னிந்தியாவில் இராட்சதர்கள் வாழ்ந்தாக சொல்லப்படுவதோடு அல்லாமல். தமிழனும் சிவபக்தனுமான அரசன் இராவணனும் அவனது குடும்பத்தினரும் கூட இராட்சதர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். நமக்கு தெரிந்த நமது வரலாறு தெளிவாகவே இருக்கின்ற நிலையில் நம்மையும் நம்முடன் வாழ்ந்த ஒரு சில திராவிட இனத்தவர்களையும் தவிர வேறு யாரும் தென் இந்தியாவிலோ இலமுரியாவிலோ வாழ்ந்ததாக சரித்திரமில்லை. அப்படியானால்...
உலகின் முதல் இனமாய் உருவெடுத்து, முயற்சியும் பயிற்சியும் கூடி இராட்சத இனமாய் உலகை அச்சுறுத்திய இனம் நமது தமிழினமே என்பதைப் பண்டைய வரலாறுகள் தெளிவாகவே சொல்லுகிறது.
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.
திரு. இராமச்சந்திர தீட்சிதர் அவர்களுடைய வரலாற்று ஆய்வு நூல்கள் மூலமாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” மூலமாகவும் தமிழர் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும், பேசிய மொழி தமிழ் மொழியே என்றும் உறுதிப்படுத்தப் படுகிறது..
பழந்தமிழர் வாழ்ந்த நாடாகிய குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்கா- வையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் வரலாற்றின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க பேரறிஞர்: ஹிரோடோடஸ் (Herodotus).
இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. வில்லியம் ஸ்காட் எல்லியாட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர். இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில்
தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம்
அல்லது நாவலன் தீவு எனப்பட்ட பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு,
ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவர் தான் தமிழர். அவர்கள் கையாண்ட நாகரிகத்தை பிற்கால ஆய்வாளர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இது திராவிடம் என்ற பகுப்பு (பிரிவினை) தோன்றுவதற்கு முன்னரே இருந்த ஒன்றாகும்.!
அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் மனித இனத்தின் மூதாதையர் வாழ்ந்தனர் எனவும் தெரிவிக்கின்றனர். (கடல் கொண்ட இலமுரியாவிற்கும் கம்போடியாவிற்கும் அக்கால உலகவரைபடத்தில் இணைப்பு இருப்பதை திரு.வில்லியம் ஸ்காட் அவர்களைப் போல இந்த ஆய்வாளர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டும்.) இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்ததாகவும். இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்றும் “குமரிப் பெருங்கண்டம்”. என்றும் அழைக்கப்பட்ட இடத்திற்கு மிகவும் அருகாமையில் இருந்தது என்பது முடிபு.
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இக்கண்டமானது , ஒரு
காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் உலகமாகவே இருந்தது...!இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர்,
தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட
நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”.
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு,
ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.
இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்”
ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம்.
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே..(நன்றி திரு.ராஜா பொன்ராஜ் அவர்களுக்கு...!)
மனித இனம் தோன்றிய இடமும் பண்டைய வரலாறும் கடலுக்கடியில்தான் இருப்பதாக உலக-வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment