Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 30, 2025

Engineering College, படிப்புகளை தேர்வு செய்வது எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்ஜினியரிங் கவுன்சிலிங் சரியான கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர்.

தமிழக அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், டி.என்.இ.ஏ., இணைய தளம் வாயிலாக நடத்தும் இன்ஜினியரிங் படிப்பு களுக்கான கவுன்சிலிங் கில் பங்கேற்று, பி.இ., பி.டெக்., படிக்க விரும்புவோருக்காக, தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழி காட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

நேற்று தாம்பரம் ராஜகோபால திருமண மண்டபத்தில், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பெற்றோருடன் ஆர்வமாக பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், நவீன தொழில்நுட்ப படிப்பு களில் உள்ள வேலை வாய்ப்புகள், கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள், ஆன்லைன் கலந்தாய்வு அணுகுமுறை, மாணவர் கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம், கல்லூரிகளின் கட் ஆப் மதிப் பெண், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து, கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா ஆலோசனைகள் வழங்கினார்.

ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியான சாய்ஸ் பில்லிங் பதிவிடு வதற்கான வழிமுறைகள், புரொவிஷனல் அலாட்மென்ட் பெறுதல், இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங் கள் குறித்து, ஸ்ரீரங்கம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி உதவி பேராசிரியர் ஜே.காளிதாஸ் விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News