![]() |
| திருமதி பிரதீபா பாட்டீல் |
| திருக்குறள்: |
குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம் :
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
பழமொழி :
Stay curious,stay learning.
ஆர்வம் இருந்தால் தான் கற்றல் தொடங்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.
2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்
பொன்மொழி :
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை . - காமராஜர்
பொது அறிவு :
01.இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
ஜெய்சல்மார் - ராஜஸ்தான்
Jaisalmar - Rajasthan
சீஸ்மோகிராப்
Seismograph
புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன்.
அரசனுக்கு இந்த புதிரைக் கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றார்..
“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர்.
கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டான்.
அரண்மனைக்குத் திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.
அரசவைக்கு இழுத்து வரப்பட்ட உழவனை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல்? நான் இல்லாமல் யாரிடமும் அந்த புதிருக்கான விளக்கத்தை சொல்லக்கூடாது. சொன்னால் உன் உயிர் போய்விடும் என்று உனக்கு நான் கட்டளையிட்டிருந்தேன். என் கட்டளையை மீறி சொல்லி இருக்கிறாய், உன் உயிரை இப்பொழுது யார் காப்பாற்றப் போகிறார் என்று பார்ப்போம்” என்று கோபத்துடன் கேட்டான் அரசன்.
அதற்கு அந்த உழவன் அரசனைப் பார்த்து, “அரசே, நான் சொல்வதைக் கேளுங்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று பணிவாக கூறினான்,” உழவன்.
அதற்கு அரசன், “நான் இல்லாமல் யாரிடமும் இந்த புதிருக்கான பதில் சொல்லக்கூடாது என்றேன் அல்லவா?” என்று கத்தினான்.
உடனே அமைச்சர் எடுத்து கொடுத்த பொற்காசுகளை அரசனிடம் காட்டிய உழவன், “இந்த பொற்காசுகளில் ஒரு பக்கத்தில் தங்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தான் அமைச்சரிடம் பதில் கூறினேன்.
எனவே தங்களை வைத்துக் கொண்டுதான் நான் விளக்கம் கூறினேன். தங்கள் கட்டளையை நான் எந்த வகையிலும் மீறவில்லை” என்று கூறினான்.
உழவனின் அறிவுக் கூர்மையை அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவுக் கூர்மையே ஆகும்.
இன்றைய செய்திகள்
21.07.2025
⭐இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை:
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
⭐ இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 கோடி பேர் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.5 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் அதாவது நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
⭐இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் RIC அமைப்பை (Russia-India-China Mechanism) உருவாக்க ரஷ்யா முயற்சி எடுத்து உள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி
🏀Freestyle செஸ் தொடர்: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி
Today's Headlines
⭐Warning to coastal residents near Mettur dam regarding the dam being filled for the 3rd time this year.
⭐ In India, about 770 million people over the age of 18 are suffering from type 2 diabetes. 25 million people are at risk of developing pre-diabetes.
⭐Russia is trying to create an RIC (Russia-India-China Mechanism) system that will bring together India, China, and Russia.
SPORTS NEWS
🏀Indian player Humpy won in the World Cup Women's Chess quarterfinal
🏀 Freestyle Chess Series: Praggnanandhaa won again, defeating world No. 1 Carlsen.
Covai women ICT_போதிமரம்







No comments:
Post a Comment