Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 28, 2025

ஒரு மாணவர் சேர்க்கை கூட இல்லை” - ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்



“4 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட இல்லை” - விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளியம்பாக்கம், கொளத்தூர், புது கேசாவரம், கிழவனம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட நடைபெறாமல் இருப்பதற்கு, தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, வட்டார கல்வி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஒற்றை இலக்கங்களில் மாணவர்கள் பயிலும் உள்ளியம்பாக்கம், கார்ப்பந்தாங்கள், புளியமங்கலம் காலனி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும், நம்மனேரியில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment