
Your mindset is your superpower.
உன் மனப்பாங்கே உன்னுடைய மிகப்பெரிய சக்தி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.
பொன்மொழி :
பிறர் மிகைப்படுத்தி கூறுவதற்கு முன் உன் குற்றத்தை ஒப்புக் கொள் - அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
" 01.சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிற்பம் எந்த மாநிலத்தில் உள்ளது?
கர்நாடகா Karnataka
02. இந்தியாவை ஏறக்குறைய இரண்டாகப் பிரிக்கும் அட்சரேகை எது?
23°30' கடக ரேகை
23°30' Tropic of cancer"
English words :
rapport – a friendly relationship in which people understand each other very well.ஒத்துணர்வு மிக்க நட்புறவு
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.
ஆகஸ்ட் 21
நீதிக்கதை
பிச்சைக்காரனும் தங்க நாணயமும்
ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப்போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான்.
இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.
நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகிவிடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.
உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறுவினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.
நீதி :
கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.
இன்றைய செய்திகள்






No comments:
Post a Comment