Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 29, 2025

மத்திய ரிசர்வ் போலீஸ் வேலை வாய்ப்பு; 3073 பணியிடங்கள்;



மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 3073 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள உதவி காவல் ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 3073 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

சப் இன்ஸ்பெக்டர் (Sub - Inspector)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 3073

காலியிடங்களின் விவரம்

மத்திய ரிசர்வ் போலீஸ் (CAPF) – 2861

CRPF – 1029

BSF – 223

ITBP – 233

CISF – 1294

SSB – 82

டெல்லி போலீஸ் – 212 (ஆண்கள் – 142, பெண்கள் – 70)

கல்வித் தகுதி: இந்த பதவிகளுக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ 35,400 – 1,12,400

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), ஆங்கில மொழி அறிவு தேர்வு (English language & Comprehension) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

ஆங்கில மொழி அறிவுத்தேர்வானது, 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் 200 வினாக்கள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/login என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2025

No comments:

Post a Comment