Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 29, 2025

TN MBBS Admission: தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்; 3-ம் சுற்றுக்கு புதிதாக 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்ப்பு


TN MBBS BDS Admission: தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு 3 ஆம் சுற்று விரைவில் தொடக்கம்; மூன்றாம் சுற்றுக்கு புதிதாக 150 சேர்க்கப்பட உள்ளதாக நிபுணர் தகவல்; முழு விபரம் இங்கே

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று முடிவுகள் வெளியாகி மூன்றாம் சுற்று தொடங்க நிலையில், புதிதாக 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த கல்லூரிகள், யாருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் சுற்றில் இடம் கிடைத்தவர்கள் தற்போது கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர். செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இடம் கிடைத்தவர்கள் சேர்க்கை பெற வேண்டும்.

இந்தநிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 150 இடங்கள் எந்தெந்த கல்லூரிகளில் உள்ளன? யாருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பதை மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் கூறியுள்ளார்.

வீடியோவின்படி, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியா முழுவதும் 525 மருத்துவ இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செயிண்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் புதிதாக 100 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது அந்த கல்லூரியின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 250. அடுத்ததாக சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது அந்த கல்லூரியின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 200.

இந்த 150 இடங்கள் மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்கு வர வாய்ப்புள்ளது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்கள், என்.ஆர்.ஐ கோட்டா இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இடங்கள் வர வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இந்த கல்வியாண்டிற்கு 7375 எம்.பி.பி.எஸ் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை கடந்த கல்வி ஆண்டின் 117750 இலிருந்து 124825 இடங்களாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment