Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 6, 2025

போலீஸ் வேலை வாய்ப்பு; 7565 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன?


டெல்லி போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் டெல்லி போலீஸ் பிரிவில் 7565 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

கான்ஸ்டபிள் (Constable)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 7565

காலியிடங்களின் விவரம்

Constable (Exe.)-Male – 4408

Constable (Exe.)-Male [Ex-Servicemen (Others)] – 285

Constable (Exe.)-Male [Ex-Servicemen (Commando)] – 376

Constable (Exe.)-Female – 2496

கல்வித் தகுதி: இந்த பதவிகளுக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 21,700 - 69,100

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 160 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude), கணினி (Computer Fundamentals) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 90 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025

No comments:

Post a Comment