7 ஊதியக்குழு
இதற்கு முன்னர் 2016 ல் மத்திய அரசு அறிவித்திருந்தது..2026 ல் 8 ஊதியக்குழு மத்திய அரசு
8வது ஊதியக் குழு சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களில் மாற்றங்களைச் செய்யும். இது 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்ச ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதிய உயர்வை கொண்டு வரும். பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2025 இல் கமிஷனுக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
10 ஆண்டு விதிப்படி பார்த்தால் 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வேண்டும்.2016 முதல் அமலில் உள்ள 7வது ஊதியக் குழு டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது.
7வது ஊதியக்குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அளவுகளை கணிசமாக உயர்த்தும்.
புதிய அடிப்படை ஊதியம் = 7வது ஊதியக்குழுவின் அடிப்படை ஊதியம் × 2.57. (அகவிலைப்படி 0% இல் தொடங்குகிறது, ஆனால் இணைக்கப்பட்ட கொடுப்பனவுகள் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்கின்றன
ஊதிய உயர்வை எப்படி கணக்கிடுவது? 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். 7வது ஊதியக்குழுவின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹18,000 ஆகும். 2.86 ஃபிட்மென்ட் ஃபாகரில் புதிய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் = ₹18,000 × 2.86 = ₹51,480 (7வது CPC அடிப்படை ஊதியத்திலிருந்து இது 186% உயர்வு)



No comments:
Post a Comment