Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 12, 2025

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியகளாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா? - ஆசிரியர் சங்கம்



நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை அங்கு பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்' என தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் புதிய ஓய்வு திட்டத்தைரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்குஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்கவேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை அப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவேண்டும்.

ஐந்து நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு உடற் கல்வி ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது போல தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளிலும் நடத்த வேண்டும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில், 10 சதவீதம் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்.இவற்றை நிறைவேற்றத்தரக் கோரி சங்கம் சார்பில் சென்னையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

அப்போதுபுதிய அரசாணை 243ன் படி நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதலில் தாங்கள் விரும்பிய இடத்திற்கு உரிய பணி மூப்போடு பணி மாறுதல் கிடைக்க ஆணை வழங்கியதற்குநன்றியை தெரிவித்தோம்.

No comments:

Post a Comment