தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல் சேகரிக்கும் பணி தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. ”உங்கள் இல்லங்களை தேடி… சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2025” என்ற முழக்கத்தின் கீழ், முன்களப்பணியாளர்களை வீட்டிற்கே அனுப்பி வைத்து தரவுகளை சேகரித்து வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டை (NIDC BLUE CARD), தனித்துவ அடையாள அட்டை (UDID) ஆகியவற்றை கையில் வைத்திருந்தால் போதுமானது. முன்களப்பணியாளர்கள் வீட்டின் வாசலுக்கே வந்து உங்களைப் பற்றிய விவரங்களை பெற்றுக் கொள்வார்கள்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இக்கணக்கெடுப்பில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒருவேளை, உங்களது மாவட்டத்தில் இன்னும் இதுபோன்ற தரவுகள் மேற்கொள்ளும் பணி நடைபெறவில்லை எனில், கீழ்க்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அறிவித்திருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு - மாவட்டங்கள் வாரியாக திட்டப் பணியாளர்களின் தொடர்பு எண் விவரங்கள்



No comments:
Post a Comment