Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 23, 2025

ந.க எண், மூ.மு எண் - போன்று அரசு அலுவலக கடிதங்களில் இருக்கும் - அதன் விளக்கம் தெரியுமா?



ந.க. எண்; மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.*

அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.

அதன் அருகில் எழுதப்பட்டுள்ள

எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது.

1. *ந.க எண்* என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

2. *ஓ.மு. எண்* என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

3. *மூ.மு எண்* என்றால் மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

4. *நி.மு. எண்* என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

5. *ப.மு. எண்* என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.

6. *தொ.மு எண்* என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

7.*ப.வெ எண்* என்றால் பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

8. *நே.மு.க எண்* என்றால், நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்

9.*உடன் முடிவு ( உ.மு)* என்ற எழுத்துக்களும் பயன்படுத்தப் படுவதைக் காணமுடியும்.

10.மேற்கொண்டு நடவடிக்கை தேவைப்படாத கடிதங்களை காரணத்தை அதிலேயே குறிப்பிட்டு, , கடிதம் அனுப்பியவர்க்கு திரும்ப அனுப்ப பயன்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண் (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.

*நேர்முகக் கடிதம் என்பது,*

கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து அளிக்க வேண்டும்.

*மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்…?*

மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,

அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம்.

கடிதம் அனுப்புகின்ற ஊழியர் தனது கடமைய தவறியுள்ளார் என்பதை இதுபோன்ற கடிதத்தை வைத்து நிரூபிக்கலாம்.

No comments:

Post a Comment