/indian-express-tamil/media/media_files/2025/10/03/rasha-1-2025-10-03-13-37-41.jpg)
"தமிழ்நாட்டில் 133 இடங்களில் 1600 கோடி மதிப்பீட்டில் மின்வாரியத்தின் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பேரிட காலங்களில் பொதுமக்களுக்கு மின்வாரியத்தின் மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம் இருந்து வருகிறது. அதற்கான முழு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் மின்வாரியம் கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு மின்வாரியத்தில் 156 மின் வாரிய பகிர்மானங்களில் 863 பணி வகை உள்ள பணியாளர்கள் களப்பணி மேற்கொள்ளவும், அனைத்து நிலை மின்வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புள்ளிவிவரத்திற்கு அடிமையாக இல்லாமல் களத்திற்கு அடிமையாக இருக்கிறோம். களத்தில் பணியாற்றுவது மின்வாரியத்தின் மிக பெரிய பணி. மின்வாரியத்தில் மின்சாரத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் நடக்காமல் இருக்கவே மின்வாரியம் விரும்புகின்றது. இதற்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள மின்வாரிய பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. களப்பணிகளை கண்காணிக்கவும் அலுவலகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேகமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 133 இடங்களில் 1600 கோடி மதிப்பீட்டில் மின்வாரியத்தின் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் ஏற்படும் சிறு சிறு குறைகளை முழுமையாக சுட்டி காட்டினால் அவற்றினை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 1226 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி காற்றாலை உற்பத்தி மூலம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்தி வீட்டுக்கு வீடு பயன்படுத்துதல் தொடர்பாக பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி அதற்கான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு மின்வாரியத்தின் மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம் இருந்து வருகிறது. அதற்கான முழு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.



No comments:
Post a Comment