Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 5, 2025

கட்டாய கல்விச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை: அக். 6 முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு


அக்டோபர் 16-ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிகளில் ஏற்கனவே சேர்ந்திருந்தால், தகுதியான மாணவர்கள் ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 16-ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிகளில் ஏற்கனவே சேர்ந்திருந்தால், தகுதியான மாணவர்கள் ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2009-ம் ஆண்டின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE - ஆர்.டி.இ) மூலம் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கி வருகிறது. அந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஆர்.டி.இ நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆர்.டி.இ நிதி ஒதுக்கிட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்திலிருந்து பிரித்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (என்.இ.பி), பி.எம் ஷ்ரீ பள்ளித் திட்ட ஒப்பந்தம் என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு தாங்கள் செய்தது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மத்திய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது.

இதையடுத்து, 2025-26 கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 16-ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிகளில் ஏற்கனவே சேர்ந்திருந்தால், தகுதியான மாணவர்கள் ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் மாற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment