*அருகம்புல் பொடி:**−−−−−−−−−−−−−−−−−−*
*அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.*
*நெல்லிக்காய் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.*
*கடுக்காய் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−*
*குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.*
*வில்வப் பொடி:*
*−−−−−−−−−−−−−−*
*அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்தக் கொதிப்பிற்கு சிறந்தது.*
*அமுக்கரா பொடி:*
*−−−−−−−−−−−−−−−−*
*தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.*
*சிறுகுறிஞான் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.*
*நாவல் பொடி:*
*−−−−−−−−−−−−−*
*சர்க்கரை நோய், தலை சுற்றலுக்கு சிறந்தது.*
*வல்லாரை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−*
*நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.*
*தூதுவளை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−*
*நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வறட்டு இருமலுக்கு சிறந்தது.*
*துளசி பொடி:*
*−−−−−−−−−−−−−*
*மூக்கடைப்பு, சுவாச கோளாறுக்கு சிறந்தது.*
*ஆவரம்பூ பொடி:*
*−−−−−−−−−−−−−−−−*
*இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.*
*கண்டங்கத்திரி பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.*
*ரோஜாபூ பொடி:*
*−−−−−−−−−−−−−−−*
*இரத்தக் கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.*
*ஓரிதழ் தாமரை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*ஆண்மை குறைபாடு, மலட்டுத் தன்மை நீங்கும். வெள்ளைப்படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.*
*ஜாதிக்காய் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.*
*திப்பிலி பொடி:*
*−−−−−−−−−−−−−−−*
*உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.*
*வெந்தயப் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−*
*வாய் புண், வயிற்று புண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.*
*நிலவாகை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−*
*மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.*
*நாயுருவி பொடி:*
*−−−−−−−−−−−−−−−−*
*உள், வெளி, நவ மூலத்திற்கும் சிறந்தது.*
*கறிவேப்பிலை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும். இரும்புச் சத்து உண்டு.*
*வேப்பிலை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−*
*குடல் வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.*
*திரிபலா பொடி:*
*−−−−−−−−−−−−−−−*
*வயிற்றுப் புண் ஆற்றும், அல்சரைக் கட்டுப்படுத்தும்.*
*அதிமதுரப் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−*
*தொண்டைக் கமறல், வறட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.*
*துத்தி இலை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்தது.*
*செம்பருத்திப்பூ பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.*
*கரிசலாங்கண்ணி பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.*
*சிறியா நங்கை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.*
*கீழா நெல்லி பொடி,:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.*
*முடக்கத்தான் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*மூட்டு வலி, முழங்கால் வலி, வாதத்துக்கு நல்லது.*
*கோரைகிழங்கு பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*தாது புஷ்டி, உடல் பொலிவு, சருமப் பாதுகாப்பிற்கு சிறந்தது.*
*குப்பை மேனி பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.*
*பொன்னாங்கண்ணி பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*உடல் சூடு, கண் நோய்க்கும் சிறந்தது.*
*முருங்கை விதை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*ஆண்மை சக்தி கூடும்.*
*லவங்க பட்டை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*கொழுப்புச் சத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.*
*வாதநாராயணன் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.*
*பாகற்காய் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−*
*குடல் வால் புழுக்களை அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.*
*வாழைத்தண்டு பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.*
*மணத்தக்காளி பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*குடல் புண், வாய்புண், தொண்டைப் புண் நீங்கும்.*
*சித்தரத்தை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.*
*பொடுதலை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−*
*பேன் உதிரும், முடி உதிரிவதைத் தடுக்கும்.*
*சுக்குப் பொடி:*
*−−−−−−−−−−−−−*
*ஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்தது.*
*ஆடாதொடை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.*
*கருஞ்சீரகப்பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−*
*சர்க்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.*
*வெட்டி வேர் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−*
*நீரில் கலந்து குடித்து வர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.*
*வெள்ளெருக்கு பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிற்று வலி நீங்கும்.*
*நன்னாரிப் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−*
*உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.*
*நெருஞ்சில் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*சிறுநீரகக் கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.*
*பிரசவ சாமான் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய் பாலுக்கு சிறந்தது.*
*கஸ்தூரி மஞ்சள் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.*
*பூலாங்கிழங்கு பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*குளித்து வர, நாள் முழுவதும் நறுமணம் கமழும்.*
*வசம்பு பொடி:*
*−−−−−−−−−−−−−*
*பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.*
*சோற்று கற்றாழை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−*
*உடல் குளிர்ச்சி, முகப் பொலிவிற்குப் பயன்படும்.*
*மருதாணிப் பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−*
*கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.*
*கருவேலம்பட்டை பொடி:*
*−−−−−−−−−−−−−−−−−−−−−−*
*பல் கறை, பல் சொத்தை, பூச்சிப் பல், பல் வலி குணமாகும்.*
*ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிடவும்.*



No comments:
Post a Comment