🌹புரிய வைக்கவும் முடியவில்லை.புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
என்ற அளவில் தான் இன்றைய உறவுகள் உள்ளன.!
🌹🌹நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று ஒரு போதும் சண்டை போடமாட்டார்கள்...
ஆனால் சத்தமில்லாமல் உங்களிடமிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள்.!!
🌹🌹🌹உங்கள் மீது
அன்பு காட்டிய ஒருவரை...
எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும்...
பிறர் முன்பு விட்டுக்கொடுத்து
அவமானப்படுத்தி விடாதீர்கள்...
பின் எவ்வளவுதான்
நீங்கள் சமாதானம் செய்தாலும்...
அந்த வலி சாகும் வரை அவர்கள் மனதை விட்டுப் போகாது.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு இன்று (13.02.2026) அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்- செய்தி குறிப்பு வெளியீடு.
🍒🍒PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா இன்று 13.02.2026(வெள்ளிக்கிழமை) நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🍒🍒புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026(திங்கட்கிழமை) முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
🍒🍒அரசு விழாக்கள், பள்ளிகளில் 'வந்தே மாதரம்' கட்டாயம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு(நாளிதழ் செய்தி)
🍒🍒பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings வெளியீடு.
🍒🍒Census 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்.
🍒🍒100 days challenge - பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் வாயிலாக 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடங்குகள் இயக்குனரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது
🍒🍒தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சொந்த மாவட்டங்களில் பணியாற்றும், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 🍒🍒HSHM TO PG CASE - வழக்கின் ஒரு தரப்பு (HSHM தரப்பு) வாதங்கள் மட்டுமே முழுவதுமாக நிறைவடைந்து உள்ளது. மற்றொரு தரப்பு (HIGH SCHOOL BT தரப்பு) வாதங்கள் மீதம் உள்ளது.வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
🍒🍒ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 17 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது.
🍒🍒சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, ஏற்ற வகையில் பொருத்தமான கற்பித்தல் முறைகள், தகவமைக்கப்பட்ட கருவிகள், மதிப்பீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கற்றல் கலைத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் கொண்டு சேர்க்கும் பணியில் சிறப்பு பயிற்றுநர்கள் ஈடுபடுகின்றனர்.
🍒🍒மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத்தொகை! தமிழகம் முழுவதும் வழங்க உத்தரவு (பத்திரிக்கை செய்தி)
🍒🍒நான் வந்த வழி வேறு
முதலமைச்சர் ஸ்டாலினின் அப்பா முதலமைச்சராக இருந்தார், அவருக்கு விளம்பரம் எளிதாக கிடைத்தது மற்றும் அரசியல் அதிகாரமும் பணபலமும் இருந்தது
நான் விவசாயியாக இருந்து படிப்படியாக உழைப்பால் பொதுச்செயலாளர் வரை உயர்ந்துள்ளேன்
முதலமைச்சர் ஸ்டாலின் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு
-எடப்பாடி பழனிசாமி
🍒🍒தவெகவை விமர்சித்த அமைச்சர்
``தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயம் இல்லை அதை பற்றி நான் கவலைப்படுவது இல்லை
மதுரையில் மாநாடு நடைபெற்றது யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன், நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள், மற்றவர்கள் 15 வயது உள்ள ஆட்கள் அதிகமாக இருந்தனர்
மதுரையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு
🍒🍒ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். 2021-ஐ விட அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும் உறுதி.
🍒🍒ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக நேற்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால்.10 தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் வங்கி, போக்குவரத்து, அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.
🍒🍒கூட்டணி ஆட்சி விவகாரத்தில் கட்சி தலைமைகளே முடிவு செய்யும் என செல்வப்பெருந்தகை பதில். கூட்டணி ஆட்சிக்கான தேவை தமிழ்நாட்டில் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து.
🍒🍒கூட்டணி ஆட்சிக்கு அதிமுக சம்மதிக்குமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதில். அதிமுகவுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டே இல்லை என்றும் காட்டமான பதிலடி.
🍒🍒தேமுதிகவிடம் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என நயினார் நாகேந்திரன் மறுப்பு. அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை என்றும் பரபரப்பு பதில்.
🍒🍒ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ல் வெளியாகிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 24ம் தேதி அதிமுக வெளியிடுகிறது
அன்றைய தினம் 15 வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தகவல்
🍒🍒"முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புரிந்துணர்வு போட்டுட்டோம், நியூஸ்ல வந்துருச்சினு இருக்க மாட்டோம். அந்த நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்து, நம்ம இளைஞர்களுக்கு ஆஃபர் லெட்டர் கையில வர வரைக்கும் பார்த்துப் பார்த்து பாஃலோ செய்கிறோம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
🍒🍒தமிழ்நாட்டில் மட்டும் ஒப்பந்தம் போட்ட குறுகிய காலத்திலேயே தொழில் நிறுவனங்கள் எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என பலரும் கேட்கின்றனர்.
ஒருங்கிணைத்து பணிகளைச் செயல்படுத்தக் கூடிய அணி, மனித வளம், நிலம் என அனைத்து அம்சங்களும் இங்கே இருக்கின்றன"
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
🍒🍒2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 527 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான டாடா, மஹிந்திரா உள்பட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 527 செயல்பாட்டுக்கு வந்துள்ளன
தமிழ்நாடு முதலீட்டு செயலாக்க மாநாட்டில் தெரிவிப்பு
🍒🍒நமது படித்த இளைஞர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்..
தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்க உரை
🍒🍒ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800க்கு விற்பனை
ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,600க்கு விற்பனை
🍒🍒சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்கள்"
"அமெரிக்கா உலகின் முதன்மை எரிசக்தி உற்பத்தியாளராக உள்ளது. அமெரிக்க நிலக்கரியின் தரம் உலகத்தில் மிக சிறந்ததாகவுள்ளது. இந்தியா, கொரியா, ஜப்பானுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது"
-டிரம்ப்
🍒🍒எவ்வளவு முதலீடுகள் என்பது முக்கியமல்ல..
எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் முக்கியம்"
-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
🍒🍒தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திட்டவட்டம்
இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு
கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என விளக்கம்
🍒🍒தேமுதிகவில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
நேற்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில், வரும் 15-ம் தேதி வரை நீட்டிப்பு
பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வரும் 15-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
🍒🍒பாமக கூட்டணி யாருடன்?
கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் முடிவு அறிவிக்கப்படும்
மக்கள் நலன் சார்ந்த கட்சியுடனே கூட்டணி அமைப்போம் - பாமக நிறுவனர் ராமதாஸ்
🍒🍒தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த முறை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிப்பு
🍒🍒5000 பேர் தான்"
"விஜய்யின் சேலம் மக்கள் சந்திப்பில் 5000 பேரை தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம்"
சேலம் மாநகர காவல் துணை ஆணையர் திட்டவட்டம்
🍒🍒எங்களுக்கு சிறந்த டிஜிபி தேவை"
“டிஜிபியை தேர்வு செய்யும் குழுவில் உள்துறை கூடுதல் செயலர் இடம்பெற வேண்டும்
விசாரணையை 16ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும், எங்களுக்கு சிறந்த டிஜிபி தேவை''
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதம்
🍒🍒'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் 5வீடுகள் கட்ட அனுமதி. இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
🍒🍒சேலத்தில் விஜய் பிரசாரம்... நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி - கட்சித் தலைமை அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, த.வெ.க சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்விற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது. இருப்பினும், வரைபடம் இணைக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களைக் காவல்துறை கேட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு 'நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டமாக' மாற்றப்பட்டு அனுமதி கோரப்பட்டது. இதைப் பரிசீலித்த காவல்துறை, 51 கடுமையான நிபந்தனைகளுடன் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, கூட்டத்தில் அதிகபட்சமாக 5,000 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிப்ரவரி 13-ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மைதானம் அல்லது கேவிபி கார்டன் உள்வளாகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்த நிகழ்வு முற்றிலும் அனுமதி பெற்றவர்களுக்காக மட்டுமே நடத்தப்படவுள்ளது. இதற்காகக் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய பிரத்யேக நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,998 நபர்கள் மட்டுமே இந்தச் சீட்டுகளைக் கொண்டு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வேறு எவருக்கும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி கிடையாது என்பதில் கட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது.
இந்தச் சந்திப்பிற்கான நுழைவுச்சீட்டு இல்லாத தொண்டர்களும் பொதுமக்களும் நிகழ்விடத்திற்கு நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று த.வெ.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. காவல்துறையின் விதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அனுமதி பெற்றவர்கள் மட்டும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேரில் வர முடியாதவர்கள் தொலைக்காட்சி நேரலைகளின் வாயிலாக இந்த நிகழ்வைக் கண்டுகளிக்கலாம் என்றும் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
🍒🍒அமெரிக்காவில் போலீசாரின் கார் மோதி இந்தியாவைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு
அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.260 கோடி இழப்பீடாக வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல்
🍒🍒வாட்ஸ்அப்-க்கு தடை
ரஷ்யாவில் வாட்ஸ்அப் செயலி முழுமையாக தடை, ரஷ்ய சட்டங்களுக்கு இணங்கி செயல்பட மறுத்ததால் நடவடிக்கை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926



No comments:
Post a Comment