Breaking

Saturday, February 14, 2026

14.02.2026(சனிக்கிழமை) - இன்றைய செய்திகள்


🌹ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக் கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல. அன்பு, அமைதி, நிம்மதி இவைகளை பெற்ற மனிதனிடம் உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.!

🌹🌹வீடு அழகாக இருக்க வீட்டை தினமும் சுத்தம் செய்கிறோம். வாழ்க்கை சிறப்பாக இருக்க உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.!!

🌹🌹🌹மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பல ஏமாற்றங்களைத் தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑️⛑️பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவான அறிவிக்கை வெளியீடு

👉ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு

ஜூலை நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவிப்பு...

👉பிப்ரவரி 18ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

TRB அறிவிக்கை எண் : 01 /2026

நாள் : 13.02.2026

👉தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தற்போது பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2026 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 👉இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 🌹👉1. முக்கியத் தேதிகள் அறிவிப்பு வெளியான நாள்: 13.02.2026

👉ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 18.02.2026

👉விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2026

👉விண்ணப்பத் திருத்தம் (Edit Option):👉11.04.2026 முதல் 👉13.04.2026 வரை 🌹👉தேர்வு தேதிகள் (உத்தேசமாக):

👉தாள் I (Paper I): 04.07.2026 (முற்பகல்)

👉தாள் II (Paper II): 05.07.2026 (முற்பகல்) 🌹👉2. விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்

01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்போ இடைநிலை ஆசிரியர் (SGT), பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) மற்றும் அதற்கு இணையான பதவிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.

பணி உயர்வு (Promotion) பெற விரும்பும் தகுதியுள்ள ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் 🌹👉3. தேர்வுக் கட்டணம்

👉பொதுப் பிரிவினர்: ரூ. 600/-

👉 SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ரூ. 300/-

👉தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

👉கட்டணத்தை ஆன்லைன் (Net banking / Credit Card / Debit Card) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். 🌹👉4. தேர்வு முறை மற்றும் தகுதி மதிப்பெண்கள்

தேர்வு OMR முறையில், 150 கொள்குறி வகை வினாக்களைக் (MCQs) கொண்டிருக்கும்.

தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

தகுதி மதிப்பெண்கள்:

👉பொதுப் பிரிவினர்: 60% (90 மதிப்பெண்கள்).

👉BC, BCM, MBC/DNC மற்றும் மாற்றுத்திறனாளிகள்: 50% (75 மதிப்பெண்கள்).

👉 SC, SCA மற்றும் ST பிரிவினர்: 40% (60 மதிப்பெண்கள்).

🌹👉5. விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (Upload செய்ய வேண்டியவை):

புகைப்படம் (40-60 KB) மற்றும் கையொப்பம் (20-40 KB).

பணிச் சான்றிதழ் (Service Certificate - Annexure-I) - இது மிக முக்கியமானது.

கல்விச் சான்றிதழ்கள் (10th, 12th, D.T.Ed/B.Ed, Degree marksheet).

சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவையெனில்).

🌹👉குறிப்பு: விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டாலோ அல்லது தேவையான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படாவிட்டாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நிச்சயமாக. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET 2026) குறித்த அறிவிப்பில் உள்ள மேலும் சில முக்கியக் குறிப்புகள் இதோ:

👉தாள்-II (Paper II): பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

👉பணிச் சான்றிதழ் (Service Certificate): விண்ணப்பதாரர்கள் 'Annexure-I' படிவத்தில் உள்ள பணிச் சான்றிதழைத் தவறாமல் பதிவேற்ற வேண்டும்.

தேர்வுத் தரம்: தாள்-II க்கான வினாக்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்தாலும், அவற்றின் கடினத்தன்மை மற்றும் தொடர்பு மேல்நிலைக் கல்வி (Higher Secondary) தரம் வரை இருக்கும்.

தேர்வு கட்டமைப்பு: இதில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை, மொழி-I, ஆங்கிலம் மற்றும் தங்களின் பாடப்பிரிவு (கணிதம் & அறிவியல் அல்லது சமூக அறிவியல்) என மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும்.

⛑️⛑️வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 6 சரணங்களும், தேசிய கீதம் ‘ஜன கண மன’ பாடல் பாடுவதற்கு முன்னதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

⛑️⛑️ADW Schools - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

⛑️⛑️துறைத் தேர்வுகள் டிசம்பர் 2025க்கான உத்தேச விடைகள் வெளியீடு

⛑️⛑️அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக அனைத்து CEOs & DEOs கூட்டம் 16.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக DSE & DGE இணைச் செயல்முறைகள் வெளியிடப்பவெளியிடப்பட்டுள்ளது.

⛑️⛑️பிப்ரவரி, மார்ச் & ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ₹3,000/- + கோடைகால சிறப்பு தொகுப்பு ₹2,000/- என ₹5,000/-நேற்று வரவு வைக்கப்பட்டது.

⛑️⛑️10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின், தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

⛑️⛑️டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு கூட்டம்

பேரன்பிற்குரிய டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.எதிர்வரும் 17.2 2026 செவ்வாய் கிழமை

காலை 10.30 மணிக்கு

டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.

பொருள்:

நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து.

தொடர் செயல்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடல்.

இடம்:

மாஸ்டர் மாளிகை,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டடம்.

23, சிங்கராச்சாரி தெரு,

பார்த்தசாரதி கோயில் அருகில்,

திருவல்லிக்கேணி,

சென்னை.

டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

அன்புடன்

ரெ.ஈவேரா,

பொதுச் செயலாளர்(பொ), தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி &

சுழல் முறை தலைவர், டிட்டோஜாக்.

⛑️⛑️தேர்வுகள் எதுவுமின்றி இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

⛑️⛑️கடந்த 5 ஆண்டுகளில் பல்லாயிரம் பேர் அரசு வேலை பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம்

5 ஆண்டுகளில் பல்லாயிரம் பேருக்கு அரசு வேலை..

“கடந்த 5 ஆண்டுகளில் TNPSC மூலமாக 45,126 பேர், USRB மூலமாக 24,927 பேர், |TRB மூலமாக 12,894 பேர், MRB மூலமாக 11,244 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54,864 பேர், விளையாட்டு இடஒதுக்கீட்டில் 177 பேருக்கு வேலை கிடைத்துள்ளன

⛑️⛑️குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி

முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்தனர். ⛑️⛑️“அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் பெரும்பாலான வேலைகளை AI முழுமையாகச் செய்து முடிக்கும்” -Microsoft AI CEO முஸ்தஃபா சுலைமான் அதிரடி கருத்து

⛑️⛑️தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அனைத்து வகையான தேர்தல் பணிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

⛑️⛑️தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளை விரைந்து செயல்படுத்த ஏதுவாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை கூடுதலாக நியமனம் செய்து அரசு உத்தரவு.

⛑️⛑️செமி கண்டக்டர் துறையில் மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

⛑️⛑️வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைப்பு; தூங்கி விழித்தவுடன் மகிழ்ச்சியான செய்தி இன்ப அதிர்ச்சியில் மிதக்கிறோம்: மகளிர் உரிமை தொகை பயனாளிகள் குதூகலம்

⛑️⛑️டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

⛑️⛑️கலைஞர் மகளிர் உரிமை தொகை; நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்துக்கு நிச்சயம் பயனளிக்கும்: மகிழ்ச்சியில் திளைக்கும் இல்லத்தரசிகள்

⛑️⛑️கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தில் ஜோதிடர் கூறிய பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்: பில்லி, சூனியம் வைத்ததாக பகீர் குற்றச்சாட்டு

⛑️⛑️தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.23ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு

⛑️⛑️STR உருக்கமான பதிவு

``உயிருள்ள வரை உஷா இன்று முதல் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படுகிறது

அதன் உணர்ச்சிப்பூர்வமான உணர்வுகள், சக்திவாய்ந்த நடிப்புகள் மற்றும் மறக்க முடியாத இசை தருணங்களுடன், இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியிலும் என்னிடமும் தொடர்ந்து ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த உன்னதமானது மீண்டும் ஒருமுறை அதன் தகுதியான வழியில் கொண்டாடப்படட்டும்.

-சிலம்பரசன்

⛑️⛑️அடுத்த ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்" -முதலமைச்சர் வாக்குறுதி

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!

⛑️⛑️பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

ஸ்டேடியத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு. கடந்தாண்டு நடைபெற்ற RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன

⛑️⛑️வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம் உச்சமடையும்

அமெரிக்கா இப்போது உலகின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது

அமெரிக்க அதிபர் டிரம்ப்

⛑️⛑️தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 ரூபாய் குறைந்தது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து சவரன் 1,15,200 ரூபாய்க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் 200 ரூபாய் குறைந்து ரூ.14,400க்கு விற்பனை.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும் ஒரு கிலோ ரூ.2,80,000க்கு விற்பனை ஆகிறது

⛑️⛑️தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது திராவிட மாடல் அரசு!

சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை’ தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில்,

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் நேற்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

⛑️⛑️மதுரையில் அமைய உள்ள 140 அடி உயர சிதம்பரனார் சிலைக்கு வரும் 22ம் தேதி குடியரசு துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்ட உள்ளார்

⛑️⛑️ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா

டி20 உலக கோப்பை: ஜிம்பாப்வே அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா.

ZIM 169/2 (20)

AUS 146 (19.3)

⛑️⛑️ரஷ்யாவிடம் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிதாக 288 ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு முடிவு

ரஷ்யாவிடம் இருந்து S-400 வான்பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தக்கூடிய 288 ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்!

ஆபரேஷன் சிந்தூரின்போது S-400 அமைப்பு பெரிதும் உதவியதாக கூறப்பட்ட நிலையில், சுமார் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய ஏவுகணைகளை வாங்க அரசு முடிவு

⛑️⛑️ஒரு பிரச்னைய சந்திக்கிற திறன் கூட விஜயிடம் இல்ல”

“ஒரு பிரச்னைக்கு 72 நாள் வீட்ட விட்டே வெளிய வரல.

15 நாள் அலுவலத்தையே மூடிட்டு போயிட்டாங்க.

ஒரு பிரச்னைய சந்திக்கிற திறன் கூட விஜயிடம் இல்ல

விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

⛑️⛑️தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்”

-காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்

⛑️⛑️விஜய் இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை, அவர் தேர்தலை சந்திக்க‌ட்டும் பிறகு பார்க்கலாம்'' - ஈபிஎஸ்

⛑️⛑️சட்டமன்ற தேர்தல் - அதிகாரிகள் நியமனம்

தமிழக சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக சிவஞானம் மற்றும் ஸ்ருதஞ்சய் நாராயணன் ஆகியோர் நியமனம்

-தேர்தல் ஆணையம் உத்தரவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

No comments:

Post a Comment