6 கூடுதலாக புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன: ஒப்பந்த செவிலியர்கள் 719 பேருக்கு பணி நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சூழலில் போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு வருகிற 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்த செவிலியர்கள், கடந்த டிசம்பர் மாதத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். 2014 ஆம் ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel