
என்னுடைய பெயர் அரிஷ். நான் அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த மாணவன். சிறு வயதிலிருந்தே கட்டிடங்கள், அணைகள், வடிவமைப்புகள் போன்றவற்றில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.
என்னுடைய பாட திட்டத்தை தாண்டி பல பாடங்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் படித்துக்கொண்டு இருக்கிறேன், அதில் ஒன்று “Water Distribution and Layout Using EPANET” என்ற பயிற்சியை நான் படித்தது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.
ஒரு அணையை எவ்வளவு உயரத்தில் கட்ட வேண்டும், எவ்வளவு அளவு தண்ணீர் சேமிக்க வேண்டும், எந்த வகை inlet மற்றும் outlet குழாய்களை பயன்படுத்த வேண்டும், எந்த பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், குழாய்களின் விட்டம் என்ன இருக்க வேண்டும் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை ஆழமாக கற்றுக்கொண்டேன்.
இவை எல்லாம் புத்தக அறிவாக மட்டுமில்லாமல், நடைமுறை அனுபவமாக எனக்கு கிடைத்தது. இன்டெர்ஷிப் காக ஒரு நிறுவனத்திற்கு சென்றபோது ஒரு அணை கட்டுவதற்கான ப்ளான் போட சொன்னார்கள், நான் படித்த “Water Distribution and Layout Using EPANET” பயன் படுத்தி போட்ட ப்ளானை பார்த்து அங்கு இருந்த அதிகாரிளே ஆச்சரியப்பட்டார்கள்.
வீட்டில் நான் அணை வடிவமைப்பு, கட்டிடம் வடிவமைப்பு போன்ற டிசைன்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், அதை அவர்கள் ஆச்சரியமாக பார்த்து சந்தோஷப்படுவார்கள். அந்த தருணங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற பயிற்சிகள் இருந்தாலும், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நான் அரசு கல்லூரி மாணவன் என்பதால், கட்டணத்தைச் செலுத்துவதற்கே சிரமம் இருந்தது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் , Tamil Nadu Skill Development Corporation வழங்கிய இந்த இலவச பயிற்சிகள் என் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன. இது எனக்கு புதிய திறன்கள், புதிய நம்பிக்கை, புதிய எதிர்காலத்தை அளித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் இன்னும் சிறப்பாக வளர வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். நான் முதல்வன் திட்டத்தை எங்களுக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி



No comments:
Post a Comment