THAMIZHKADAL TODAY NEWS

ஆசிரியர் பணி நியமன புகாரில் பி.இ.ஓ.,க்களிடம் விசாரணை

தேனி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நியமனம் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,)களிடம் நேற்று விசாரணை நடந்தது. இன்றும் டி.இ.ஓ., நாகலட்சுமி, பி.இ.ஓ.,க்களிடம் விசாரணை தொடர உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம், பள்ளி நிர்வாகங்களில் அதிகாரிகள் தலையீடு உள்ளதாக கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.

இதில் தொடக்கல்வி துணை இயக்குநர் சுப்பாராவ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. தொடக்க கல்வி டி.இ.ஓ., (மாவட்ட அலுவலர்) நாகலட்சுமி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பணி நியமன கோப்புகளுடன் விசாரணையில் பங்கேற்க டி.இ.ஓ., பி.இ.ஓ.,க்கள், அலுவலக பணியாளர்களுக்கு கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. விசாரணை நேற்று அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இடைநிலைக்கல்வி டி.இ.ஓ.,அலுவலக மாடியில் துணை இயக்குனர் சுப்பாராவ் தலைமையில் நடந்தது. பி.இ.ஓ.,க்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், எழுத்தர்களிடம் விசாரணை நடந்தது. இரண்டாவது நாளான இன்றும் பணிநியமன கோப்புகளுடன் விசாரணைக்கு ஆஜராக டி.இ.ஓ.,நாகலட்சுமி, பி.இ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel