Breaking

Friday, February 27, 2026

பணி வாய்ப்புக்கு என நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தற்பொழுது நடைபெறும் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டுமா?


2010 முதல் 2025 வரை தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பணிவாய்ப்புக்காக நடத்தப்பட்டது

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே 2012 முதல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்

தாள் ஒன்று தேர்ச்சி எனில் இடைநிலை ஆசிரியராகவும் தாள் இரண்டு தேர்ச்சி எனில் பட்டதாரி ஆசிரியராகவும் பணி நியமனம் வழங்கப்படுகிறது

தாள் ஒன்று தேர்ச்சி யின் மூலம் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற பலர் தாள் இரண்டில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர்

அதே போன்று

தற்பொழுது பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர்

அவ்வாறு ஏற்கனவே 2025 வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தற்பொழுது நடைபெறும் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை

ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற, தற்பொழுது பணியில் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வுக்கும் தகுதி பெற்றவராகவே கருத்தில் கொள்ளப்படுவார்கள்

எனினும் தாள் ஒன்றை மட்டும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தாள் இரண்டை எழுதினால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராகவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற தகுதி உடையவர் ஆவார்கள்

தாள் இரண்டை எழுதி தேர்வு பெற்றவர்கள் பணியில் தொடரவும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் தகுதி உடையவர் ஆவார்கள்

மொத்தத்தில் இதுவரை தகுதி தேர்வில் தாள் ஒன்று அல்லது தாள் இரண்டு அல்லது இரண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இனி எழுதத் தேவையில்லை.

No comments:

Post a Comment