Saturday, March 14, 2026

இன்றைய செய்திகள் 14.03.2026(சனிக்கிழமை)

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

🌹மற்றவரின் மனதை நோகடித்து விடாமல் பார்த்து,பார்த்து வாழ்பவர்கள் தான்!அவ்வப்போது மற்றவர்களால் மனம் நோகடிக்கப்படுகிறார்கள்.!

🌹🌹வேண்டாம் என்கிற இடத்தை விட்டு 

வெளியே வந்துவிடுங்கள்...

இல்லையேல்...

முதலில் அவமதிப்பார்கள்...

அடுத்தது வெறுப்பார்கள்...

அடுத்து உங்களை 

தவறானவன் என்ற பட்டம் சூட்டிவிடுவார்கள்.!!

🌹🌹🌹நீ யாரை நம்புகிறாய் என்பதில் மிகவும் கவனமாக இரு.!

ஏனெனில்,துரோகம் எப்போதும் நம்பியவர்களிடம் இருந்து தான் வரும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

👔👔சர்வதேச கணித தினம்!

👉சர்வதேச கணித தினம் என்பது கணிதத்தைக் கொண்டாடும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்! அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கணிதத்தின் முக்கிய பங்கைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

👉மார்ச் 14 ஆம் தேதியை சர்வதேச கணித தினமாக அறிவிக்கும் அறிவிப்பு யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் 205வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த நாள் 2019 நவம்பரில் நடந்த யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 40வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 2020 ஆம் ஆண்டில், உலகம் அதன் முதல் சர்வதேச கணித தினத்தை மார்ச் 14, 2020 அன்று 'கணிதம் எல்லா இடங்களிலும் உள்ளது' என்ற கருப்பொருளுடன் கொண்டாடியது.

👔👔வருகின்ற (16.03.2026) திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL&RH) எடுக்கலாம்.

👉காரணம்:

  ஷபேகாதர்

👔👔DEO முதன்மைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

👔👔கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி - TNPSC Group- IIA தேர்வு மூலம் நிரப்பப்படும்

👔👔UPSC தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு

👔👔அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு

👉வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE  (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

👉எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.

👉இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு,  IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.                                                             👉மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.

👉ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.

👔👔அரை நூற்றாண்டு வேலை - 5 ஆண்டில் செய்துள்ளோம்" - சென்னையில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

👔👔தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஒரு வணிக சிலிண்டருக்கு 5000 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் வணிக சிலிண்டருக்கு டிமாண்ட் அடிப்படையில் விலை நிர்ணயம்

வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு பிரபல ஹோட்டல்களில் உணவு விலையுடன் கேஸ் பயன்பாட்டு கட்டணம் சேர்த்து வசூலிப்பு

👔👔போர் எதிரொலி: கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முடங்கியது – கோடிக்கணக்கில் தேக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகப்புகழ் பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மிட்டாய்கள் தேக்கமடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கோவில்பட்டி என்றாலே நினைவுக்கு வருவது அதன் சுவையான கடலை மிட்டாய் தான். கடந்த 2020-ம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு (Geographical Indication) கிடைத்த பிறகு, இதன் மவுசு சர்வதேச அளவில் அதிகரித்தது. கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் சுமார் 120 உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. நேரடி மற்றும் மறைமுகமாக 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர்.

உற்பத்தியாகும் மிட்டாய்களில் 70 சதவீதம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் சூழலால் பின்வரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் பதற்றத்தால் கடந்த 10 நாட்களாக ஏற்றுமதி முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. ஏற்கனவே ஆர்டர் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றை ரத்து செய்து வருகின்றன. பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாட்டால், மிட்டாய் பேக்கிங் செய்யப் பயன்படும் பிபி கவர் (PP Cover) மற்றும் பிளாஸ்டிக் ஜார் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

ஏற்கனவே நிலவும் கடலை பருப்பு விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலுக்கு, இந்த ஏற்றுமதி முடக்கம் பெரும் இடியாக அமைந்துள்ளது.  ஏற்றுமதி முடங்கியுள்ளதால், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் கண்ணன் கூறுகையில்: "வளைகுடா நாடுகளுக்குத்தான் அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறோம். தற்போது நிலவும் போர் சூழலால் உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதே நிலை நீடித்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும். கடலை மிட்டாய் மட்டுமின்றி, இதனுடன் ஏற்றுமதி செய்யப்படும் இதர இனிப்பு மற்றும் கார வகைகளும் தேக்கமடைந்துள்ளன," எனத் தெரிவித்தார்.

👔👔எரிசக்தியை தடையின்றி கொண்டு வர முன்னுரிமை தேவை; வளைகுடா நாடுகளில் உள்ள நிலைமை குறித்து ஈரான் அதிபருடன் பேசினேன் - ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மோடி X தளத்தில் பதிவு.                                                                       

👔👔அஜித்குமாருக்கு பரிசளித்த மகிந்திரா நிறுவனம் 

ரேசிங் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக மகிந்திரா கார் நிறுவனம் நடிகர் அஜித்குமாருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள World first formula E themed SUV  காரை பரிசாக வழங்கியது

மகிந்திரா குழுமத்தின் வாகன தொழில் பிரிவு தலைவர் ஆர் வேலுச்சாமி இதனை நடிகர் அஜித்குமாருக்கு வழங்கிய வீடியோ இணையத்தில் வைரல்

👔👔சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.15) திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள்.,= எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்

👔👔சிலிண்டர் குறித்து வதந்தி பரப்புபவர்கள் நாட்டுக்கே எதிரானவர்கள்: பிரதமர் மோடி

தற்போது எல்பிஜி பற்றி நிறைய வதந்திகளும் உள்ளன. சிலர் பீதியை உருவாக்குகின்றனர்.அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்கள் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கிறார்கள்

போரினால் ஏற்பட்ட இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும் எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடவில்லை. இதனைச் சமாளிக்க பல்வேறு நிலைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடனும் இதுகுறித்து நான் விவாதித்தேன். விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளை சமாளிக்க தொடர்ச்சியான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

👔👔இன்று திறக்கப்படும் சபரிமலை நடை.

மாதாந்திர பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (மார்ச் 14) திறக்கப்பட உள்ளது.

பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக மார்ச் 22ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

👔👔நாங்கள் தனி மரம் இல்லை தோப்பு: சசிகலா

சட்டமன்றத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சசிகலா அறிவிப்பு

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடங்கிய கட்சியில் தான் இணைந்த 

சசிகலா அறிவிப்பு

👔👔மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி மருத்துவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

👔👔ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

👔👔நெடுஞ்சாலைத் துறை சார்பில் 11 சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

👔👔திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.

👔👔திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக பெண் நியமனம்: ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமனம்

👔👔12 மாதங்களில் 2 ஐசிசி தொடரில் சாம்பியன்; கவுதம் கம்பீரிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?: முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டி

👔👔ஐபிஎல் தொடரில் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆடுவதில் சிக்கல்

👔👔நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்

👔👔சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி அதிமுக தலைவர் புகழேந்தி அறிவிப்பு

👔👔"பெண்களின் வேலைவாய்ப்புகளை மோசமாக பாதிக்கும்".. மாதவிடாய் விடுப்புக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

👔👔திமுக போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது: நடிகர் வடிவேலு பேச்சு

👔👔தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

👔👔எடப்பாடி சாதித்தாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரிந்துவிடும் : புதிய கட்சியை அறிவித்த பின் சசிகலா பேட்டி

👔👔தமிழ்நாட்டில் 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.

👔👔பெட்ரோல் , டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் - இந்தியஆயில்

👔👔ஈரான் அதிபருடன் பிரதமர் பேச்சு

ஈரானில் போர் நீடித்துவரும் நிலையில் அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அப்பாவி மக்களின் உயிரிழப்பு, உள்கட்டமைப்பு சேதம் குறித்து கவலை தெரிவித்தார்

ஈரான் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி போக்குவரத்து குறித்து பேச்சுவார்த்தை

👔👔30 இந்திய கப்பல்கள் காத்திருப்பு

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இந்தியக் கொடியுடன் 30க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருப்பு

கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்ல ஒத்துழைக்குமாறு ஈரான் அதிகாரிகளிடம் இந்தியா வலியுறுத்தி வருவதாக தகவல்

👔👔3.5 கோடி லிட்டர் விற்பனை 

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்களிடையே அச்சத்தினால் வியாழக்கிழமை  ஒரே நாளில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனை. வழக்கமான நாட்களில் சராசரியாக 2 கோடி லிட்டர் பெட்ரோல் - டீசல் விற்பனையாகும் 

தமிழகத்தில் பெட்ரோல் - டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என  பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கம்

👔👔விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு

கொல்கத்தாவில் இன்று பிரதமர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில்,வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

👔👔ஜல் ஜீவன் நிதி - முதலமைச்சர் கடிதம்

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3112 கோடியை வழங்க கோரிக்கை

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் 3-பாகத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.                              என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்,                                                        மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application