THAMIZHKADAL TODAY NEWS

8வது ஊதியக்குழு: பியூன் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை... யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

8th Pay Commission Salary Hike: பல மாதங்களாக 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக உள்ளது. ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் புதிய ஊதிய விகிதங்கள் மற்றும் ஓய்வூதிய விகிதங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய நேரம்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அறிவித்தது. எனினும் அதன் பிறகு பெரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. நவம்பர் மாதத்தில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட 8வது ஊதியக்குழு சுமார் 18 மாதங்களில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். 8வது ஊதியக் குழு 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2028 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ செயல்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Fitment Factor: அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

ஊழியர்களிடையே 8வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த விவாதம் உச்சத்தில் உள்ளது. இப்போது, ​​தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FNPO) 8வது ஊதியக் குழு தொடர்பாக அரசாங்கத்திடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. சமீபத்தில், FNPO தேசிய கவுன்சிலுக்கு தங்கள் கோரிக்கைகளை தெளிவாகக் கூறி அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்தக் கடிதத்தில், A, B, C மற்றும் D பிரிவுகளில் உள்ள அஞ்சல் ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை 3 முதல் 3.5 வரை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Salary Hike: சம்பள உயர்வை தீர்மானிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 -க்கு மேல் இருப்பது நாட்டின் பொருளாதார யதார்த்தத்துடன் ஒத்துப்போகாது என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த பதிவில் 2 மற்றும் 3 ஆகிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் பியூன் முதல் IAS அதிகாரி வரை அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒருவரின் அடிப்படை சம்பளத்தை மாற்றக்கூடிய ஒரு பெருக்கி ஆகும். அப்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுவதால், சம்பளம் எந்த விகிதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான அங்கமாக அது உள்ளது. உதாரணமாக, 7வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் ​​6வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை சம்பளம் ₹7,440 ஆக இருந்த ஊழியரின் சம்பளம் ₹18,000 ஆக அதிகரித்தது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

கிரேடு லெவல்அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2)சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
லெவல் 13600018,000.00
லெவல் 23980019,900.00
லெவல் 34340021,700.00
லெவல் 45100025,500.00
லெவல் 55840029,200.00
லெவல் 67080035,400.00
லெவல் 78980044,900.00
லெவல் 89520047,600.00
லெவல் 910620053,100.00
லெவல் 1011220056,100.00
லெவல் 1113540067,700.00
லெவல் 1215760078,800.00
லெவல் 13237000118,500.00
லெவல் 13262200131,100.00
லெவல் 14288400144,200.00
லெவல் 15364400182,200.00
லெவல் 16410800205,400.00
லெவல் 17450000225,000.00
லெவல் 18500000250,000.00

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

கிரேடு லெவல்அடிப்படை ஊதியம் (ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2)சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
லெவல் 15400036,000.00
லெவல் 25970039,800.00
லெவல் 346510043,400.00
லெவல் 47650051,000.00
லெவல் 58760058,400.00
லெவல் 610620070,800.00
லெவல் 713470089,800.00
லெவல் 814280095,200.00
லெவல் 9159300106,200.00
லெவல் 10168300112,200.00
லெவல் 11203100135,400.00
லெவல் 12236400157,600.00
லெவல் 13355500237,000.00
லெவல் 13393300262,200.00
லெவல் 14432600288,400.00
லெவல் 15546600364,400.00
லெவல் 16616200410,800.00
லெவல் 17675000450,000.00
லெவல் 18750000500,000.00
தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பு தங்கள் கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டும் 60 பக்க கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இந்தக் கடிதத்தில், அவர்கள் அதிக சம்பள உயர்வை கோரியுள்ளனர்.

தேசிய அஞ்சல் அமைப்புகளின் பிற கோரிக்கைகள்:

- பே மேட்ரிக்ஸ் முறையில் மாற்றங்கள்,
- வருடாந்திர சம்பள உயர்வுகள்,
- அதிக கொடுப்பனவுகள்
- விரைவான பதவி உயர்வுகள்

NCJMC (தேசிய கவுன்சில் கூட்டு கண்காணிப்புக் குழு) பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தும் என்று FNPO உறுப்பினர் சிவாஜி வாசிரெட்டி தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது, ​​ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு வரைவு தயாரிக்கப்படும். பின்னர் இந்த வரைவு 8வது ஊதியக் குழுவின் தலைவர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு அனுப்பப்படும்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel