சுயநிதி படிப்புகளுக்கான கட்டணத்தை 10% உயர்த்த சென்னை பல்கலை. ஒப்புதல்

சென்னை பல்​கலைக்​கழக சிண்​டிகேட் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பல்​கலைக்​கழக நிர்​வாக ஒருங்​கிணைப்​புக் குழு அமைப்​பாள​ரும், உயர்​கல்​வித் துறை​யின் செயலரு​மான பொ.சங்​கர், ஒருங்​கிணைப்​புக் குழு​வின் உறுப்​பினரும், ஆங்​கில இலக்​கி​யத் துறை​யின் தலை​வரு​மான பேராசிரியர் எஸ்​.ஆம்​ஸ்ட்​ராங் ஆகியோர் தலைமை வகித்​தனர். பல்​கலைக்​கழக பதி​வாளர் ரீட்டா ஜான் முன்​னிலை வகித்​தார்.

இக்​கூட்​டத்​தில், சுயநிதி படிப்​பு​களுக்​கான கல்வி கட்​ட​ணத்தை 10 சதவீதம் உயர்த்த உறுப்​பினர்​கள் ஒப்​புதல் அளித்​தனர்

மேலும், தனி​யார் கல்​லூரி முதல்​வர் நியமன அனு​ம​தி, கிறிஸ்​த​வியல் தொடர்​பான 2 சான்​றிதழ் படிப்​பு​கள் அறி​முகம் உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்​கப்​பட்​ட​தாக சிண்​டிகேட் உறுப்​பினர்​கள் தெரி​வித்​தனர்.

மேலும், தற்​போது சென்னை பல்​கலைக்​கழக இணைப்பு அங்​கீ​காரத்​துடன் செயல்​பட்டு வரும் அடை​யாறு டாக்​டர் எம்​ஜிஆர் ஜானகி மகளிர் கல்​லூரியை, வேல்ஸ் பல்​கலைக்​கழகத்​துடன் இணைப்​ப​தற்கு ஒப்​புதல் அளிப்​பது குறித்​தும் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel