10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


பத்​தாம் வகுப்பு விடைத்​தாள் திருத்​தம் தொடர்​பான வழி​காட்டு நெறி​முறை​களை தேர்​வுத் துறை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்​கியது. பிர​தானத் தேர்​வு​கள் முடிந்​து​விட்ட நிலை​யில், நாளை (ஏப்​.6) நடை​பெறும் விருப்​பப் பாடத் தேர்​வுடன் தேர்​வு​கள் முடிவடைகின்​றன.

இந்த நிலை​யில், விடைத்​தாள் திருத்​தம் தொடர்​பாக அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் தேர்​வுத் துறை இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணியை செய்து முடிக்​கத் தேவை​யான ஆசிரியர்​கள் எண்​ணிக்​கை​யை, பாடப் பிரிவு, பயிற்று மொழி வாரி​யாக சரி​யாக கணக்​கிட்டு உடனே அவர்​களை பணி​யில் இருந்து விடு​வித்து முகாம் பணிக்கு அனுப்ப வேண்​டும். தமிழ் வழி​யில் கற்​பிக்​கும் ஆசிரியர்​கள் தமிழ்​வழி விடைத்​தாள்​களை​யும், ஆங்​கில வழி​யில் கற்​பிக்​கும் ஆசிரியர்​கள் ஆங்​கில​வழி விடைத்​தாள்​களை​யும் மட்​டுமே மதிப்​பீடு செய்ய வேண்​டும்.

மதிப்​பீட்​டுப் பணி​களை தாமதமின்றி குறிப்​பிட்ட நாட்​களுக்​குள் முடிக்க வேண்​டும். இதற்​காக, தங்​களது நிர்​வாகத்​துக்கு உட்​பட்ட பள்​ளி​களில் இருந்து 10-ம் வகுப்பு பாடம் நடத்​தும் தகு​தி​யான பாட ஆசிரியர்​களை பணி​யில் இருந்து விடு​வித்​து, தேர்​வாளர்​களாக நியமனம் செய்து மதிப்​பீட்​டுப் பணியை மேற்​கொள்ள அறி​வுறுத்தி அனுப்பி வைக்க வேண்​டும். எந்த பள்​ளி​யில் இருந்​தும் ஆசிரியர்​கள் விடு​ப​டாத வகை​யில் கண்​காணிக்க வேண்​டும். மதிப்​பீட்​டுப் பணிக்கு அனுப்​பும் ஆசிரியர்​களுக்கு ஏப்​.9-ம் தேதிக்​குள் நியமன ஆணையை வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel