ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம்

வரும் கல்​வி​யாண்டு முதல் ஒருங்​கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்​சி.பிஎட்., பிஏ.பிஎட். படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்கை நடை​பெறாது என தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்ளது.

தற்​போது கல்​லூரி​களில் 3 ஆண்டு கால பட்​டப் படிப்பை முடித்து அதன் பிறகு 2 ஆண்டு பிஎட் படித்​தால் மொத்​தம் 5 ஆண்​டு​கள் ஆகி​விடும். அதே​நேரத்​தில் ஒருங்​கிணைந்த பிஎட் படிப்பை 4 ஆண்​டு​களில் முடித்​து​விடலாம். பிஎஸ்​சி.,பிஎட்., பிஏ.,பிஎட். என்ற பெயரில் இந்த ஒருங்​கிணைந்த 4 ஆண்டு பிஎட். படிப்​பில் சேரு​வ​தால் ஓராண்டு காலம் மிச்​ச​மாகும்.

எனவே ஆசிரியர் பணி​யில்சேர விரும்​பும் மாணவர்​கள் 4 ஆண்டு கால ஒருங்​கிணைந்த பிஎட் படிப்​பில் சேர விரும்​பு​கிறார்​கள். இந்த படிப்​பானது குறிப்​பிட்ட சில கல்​வி​யியல் கல்​லூரி​களி​லும், நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​களி​லும் வழங்​கப்​படு​கின்​றன.

சுற்றறிக்கை: இந்​நிலை​யில், என்​சிடிஇ-​யின் உத்​தர​வைத் தொடர்ந்து வரும் கல்​வி​யாண்டு முதல் 4 ஆண்டு கால ஒருங்​கிணைந்த பிஎட். பட்​டப் படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்​தப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​தின் பதி​வாளர் (பொறுப்​பு) கே.​ராஜசேகரன், 4 ஆண்டு ஒருங்​கிணைந்த பிஎட். படிப்பை வழங்​கும் கல்​வி​யியல் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது:

கடந்த 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் 12-ம் தேதி அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) ஒரு பொது அறி​விப்பை வெளி​யிட்​டது. அதில், ஒருங்​கிணைந்த 4 ஆண்டு பிஎஸ்​சி.,பிஎட். மற்​றும் பிஏ.,பிஎட். பட்​டப் படிப்​பு​கள் 2026-27 கல்​வி​யாண்டு முதல் நிறுத்​தப்​படு​வ​தாக​வும், அப்​படிப்​பு​களை நடத்​தும் எந்​த வொரு கல்வி நிறு​வன​மும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனு​ம​திக்​கப்​ப​டாது என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பொது அறி​விப்​பின்​படி, தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​துடன் இணைப்பு பெற்று இயங்​கும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் நடத்​தப்​படும் ஒருங்​கிணைந்த 4 ஆண்டு பிஎஸ்​சி.,பிஎட்., பிஏ.,பிஎட். பட்​டப் படிப்​பு​களில் 2026-27-ம் கல்​வி​யாண்டு முதல் மாணவர் சேர்க்கை மேற்​கொள்ள அனு​மதி இல்​லை. என்​சிடிஇ விதி​முறை​களை மீறி மாணவர் சேர்க்கை மேற்​கொண்​டால் அதற்கு தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் எந்த விதத்​தி​லும் பொறுப்​பேற்​காது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel