/indian-express-tamil/media/media_files/2026/01/09/ssc-exam-calendar-2026-2026-01-09-13-57-52.jpg)
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் (ஸ்டெனோகிராபர்) கிரேடு ’சி’ மற்றும் ’டி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பணியிடங்களுக்கான தேர்வை எஸ்.எஸ்.சி அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer) Grade C & D
காலியிடங்களின் எண்ணிக்கை: 731
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: கிரேடு ’சி’ பணியிடங்களுக்கு, 01.08.2026 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கிரேடு ’டி’ பணியிடங்களுக்கு, 01.08.2026 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகளும், ஆங்கில பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
திறனறி தேர்வு சுருக்கெழுத்து தட்டச்சு திறனை சோதிக்கும் வகையில் 50 நிமிடங்களுக்கு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2026
No comments:
Post a Comment