Monday, April 27, 2026

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை எப்போது? தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயல்முறை மே 2 ஆவது வாரத்தில் தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள், வருகின்ற மே 8 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை தொடங்கும்.

பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறும். அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கலந்தாய்வு செயல்முறை மூலம் நடைபெறும். இதற்காக, உயர் கல்வித் துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் வழியாக, கலந்தாய்வு நடத்தி பொறியியல் இடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் பணிகள் துவங்கி உள்ளன.

No comments:

Post a Comment