ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் ஆசிரியர், காப்பாளர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்


ஆதி​தி​ரா​விடர் நலத் துறை ஆணை​யர் த.ஆனந்த், மாவட்ட அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி ஆதி​தி​ரா​விடர் நலத் துறை பள்​ளி, சமூக நீதி விடு​தி​களில் பணிபுரி​யும் ஆசிரியர்​கள், காப்​பாளர்​கள் 2 ஆண்​டு​களுக்​குள் ஆசிரியர் தகு​தித் தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்​டும்.

5 ஆண்​டுக்​குள் ஓய்​வு​பெறும் ஆசிரியர்​களுக்கு இதில் விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், பதவி உயர்வு பெறு​வதற்கு அனை​வரும் கட்​டா​யம் டெட் தேர்ச்சி பெற வேண்​டும். எனவே, தங்​களது மாவட்​டத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் நலத் துறை பள்​ளி, சமூக நீதி விடு​தி​களில் பணிபுரி​யும் இடைநிலை ஆசிரியர்​கள், காப்​பாளர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​களில் டெட் தேர்ச்சி பெறாதவர்​களைக் கணக்​கெடுக்க வேண்​டும். ஜூலை​யில் நடை​பெற உள்ள டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பித்து தேர்ச்சி பெறு​மாறு அவர்​களை மாவட்ட அலு​வலர்​கள் அறி​வுறுத்த வேண்​டும்
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel