JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, May 28, 2026

அரசு பள்ளி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

''தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: பாரத சாரண - சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

பள்ளி மாணவ - மாணவியர் அனைவரும், சாரண - சாரணியர் இயக்கத்தில் தங்களை கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த இயக்கம் கற்றுக் கொடுக்கும் ஒழுக்கம், கல்வி மற்றும் பயிற்சி, இளம் தலைமுறையினருக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment