JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, May 24, 2026

பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் விநியோகம்: அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு


சென்னையில், பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வரும் ஜூன் 1-ம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, 2026- 27ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பைகள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் மாவட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, மாவட்ட மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நேரடியாக நலத்திட்ட பொருட்களை வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சீருடைகள், புத்தகப் பைகள்: அதன் ஒரு பகுதியாக, சென்னை, சிந்தாதிரிப் பேட்டை, கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பைகள் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்ட பொருட்களை பள்ளிக்கு நேரடியாக விநியோகம் செய்யும் பணியை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள அனைத்து விலையில்லா நலத்திட்ட பொருட்களும், அனைத்து மாணவர் களுக்கும் வழங்கப்பட தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். எந்த தடையும் இல்லாமல் விநியோக பணிகள் நடைபெற வேண்டும் என பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ. நரேஷ், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் கபிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment