JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, June 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.06.2026

சார்லஸ் டிக்கென்ஸ்


திருக்குறள்: 


அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:424

குறள்:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு


பொருள்:
தான்‌ சொல்லுவனவற்றை
எளிய பொருளையுடையனவாகப்‌ பதியுமாறு சொல்லித்‌, தான்‌ பிறரிடம்‌ கேட்பவற்றின்‌ நுட்பமான பொருளையும்‌ ஆராய்ந்து காண்பது அறிவாகும்‌.

பழமொழி :

பழக பழக பாலும் புளிக்கும்.

 Familiarity breeds contempt.

இரண்டொழுக்க பண்புகள் :.


1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை.

Thought for the Day :

Responsibility is not what is given to you. It is what you choose to own.

பொது அறிவு : 

1. இந்தியாவிலேயே முதல் முறையாக கடலுக்கடியில் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்படுகிறது? 

மகாராஷ்டிரம்.

 2. ஜுன் 1,2026 நிலவரப்படி இந்தியாவில் உள்ள இரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 

18.

English words :

Accept – Receive, ஏற்றுக்கொள். 

Brave – Courageous, தைரியமான.

NMMS :

8,4,15,5,22,6, ____ , ________ 

(1) 29, 7. (2) 28, 7. (3) 29, 8. (4) 27, 8. 

  • 1)     இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் இடத்தில் உள்ள எண்கள் வரிசையாக உள்ளன. அதன்படி எட்டாவது இடத்தில் வரவேண்டிய எண் 7
  • 2)  o  8 + 7 = 15
    • 15 + 7 = 22
    • 22 + 7 = 29

விடை: (1) 29,7

புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி நமக்குக் கிடைத்த பரிசு அல்ல; முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றது.

ஜூன் 09

சார்லஸ் டிக்கென்ஸ் அவர்களின் நினைவுநாள்

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

நீதிக்கதை

 புத்தகத்தின் மதிப்பு


ஒரு கிராமத்தில் வருண் என்ற சிறுவன் படித்து வந்தான். அவனுடைய புத்தகங்களும் நோட்டுகளும் எப்போதும் சிதறிக் கிடக்கும். சில நேரங்களில் புத்தகத்தின் பக்கங்களை மடிப்பான், நோட்டுகளில் கிறுக்குவான். பள்ளிப் பையை கூட சரியாக வைத்துக்கொள்ள மாட்டான்.

அதே வகுப்பில் நந்தினி என்ற சிறுமி படித்தாள். அவள் தனது புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட்டு, பெயர் எழுதி, மிகவும் பத்திரமாக வைத்திருப்பாள்.

ஒருநாள் தேர்வு நெருங்கியது. வருண் படிக்க அமர்ந்தபோது, அவன் அறிவியல் நோட்டினை காணவில்லை. கணிதப் புத்தகத்தின் சில பக்கங்கள் கிழிந்திருந்தன. முக்கியமான குறிப்புகள் பலவற்றை அவனால் படிக்க முடியவில்லை.

ஆனால் நந்தினி தனது புத்தகங்களையும் நோட்டுகளையும் ஒழுங்காக வைத்திருந்ததால், தேவையான பாடங்களை எளிதாகத் திரும்பப் படித்தாள்.

தேர்வு முடிவுகள் வந்தபோது, நந்தினி நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். வருணுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் வரவில்லை.

அப்போது ஆசிரியர் கூறினார்:

"புத்தகங்களும் நோட்டுகளும் நம் அறிவின் நண்பர்கள். அவற்றைப் பத்திரமாகப் பராமரித்தால், அவை சரியான நேரத்தில் நமக்கு உதவும்."

அன்றிலிருந்து வருணும் தனது புத்தகங்களையும் நோட்டுகளையும் கவனமாகப் பாதுகாக்கத் தொடங்கினான்.

நீதி: புத்தகங்களையும் நோட்டுகளையும் பத்திரமாகப் பராமரிப்பது நல்ல பழக்கமும், நல்ல கல்விக்கான அடிப்படையும் ஆகும். 📚✨

இன்றைய செய்திகள்

09.06.2026

🗒️கீழடி அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவரின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🗒️மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018 சட்டத்தின் கீழ் செய்தித்தாள்களில் திண்பண்டங்களை மடித்து 
வழங்கத் தடை.

🗒️அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் காரணமாக ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என  இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

 விளையாட்டு செய்திகள்

🏀கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
 இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

🗒️ The continuation of a brick-built wall has been discovered during the excavations at Keeladi Excavation Site.

🗒️ To protect public health, wrapping and serving food items in newspapers has been prohibited under the Food Safety and Standards Regulations, 2018.

🗒️ Due to the conflict between the United States and Iran, the Indian Embassy has advised citizens to avoid traveling to Iran.

Sports News

🏀 Cricket – India secured a convincing victory in the Test match against Afghanistan.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment