இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, உயர்கல்விக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment