Subscribe Us

Wednesday, July 22, 2026

HS HM Promotion வழக்கு விசாரணை 12.08.2026க்கு ஒத்திவைப்பு!!!


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் எடுத்த எடுப்பிலேயே குறுக்கிட்டு இவ்வழக்கை லோக் அதாலத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள்.

அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அரசு தரப்பில் இன்றைய வாதத்தை முன் வைக்க ஆணையிட்டது. ஆனால் அரசு தரப்பு மேலும் அவகாசம் கோரியது. அதனை நீதிமன்றம் மேலும் கடுமையாக ஆட்சேபித்தது.

லோக் அதாலத்திற்கு இவ்வழக்கு பரிந்துரைக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இன்று வழக்கு முடியும் தருவாயில் இருந்த நிலையில் இவ்வாறான குழப்பங்களால் மேலும் ஒரு வாய்தாவுக்குச் செல்கிறது. வரும் 12.08.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் திரு. அஜ்மல்கான், திரு. மெஹரோட்ரா, திரு. சுந்தர் ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

No comments:

Post a Comment