அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:464
குறள்:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
பொருள்:
இரண்டொழுக்க பண்புகள் :.
1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.
2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.
பொன்மொழி :
மழைத்துளி சிறியது; ஆனால் அதன் பலன் அளவற்றது.
Thought for the Day :
Rain is nature's blessing to the Earth.
பொது அறிவு :
1. தமிழ்நாட்டு மாநில அரசின் இலச்சு ( Tamilnadu state emblem) எது?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்.
2. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்துடன் கூடிய தமிழக அரசின் மாநில சின்னத்தை வடிவமைத்தவர் யார்?
R. கிருஷ்ணா ராவ்.
English words :
Prudent – Acts wisely, விவேகமானவர்.
Compassionate – Shows kindness, இரக்கமுள்ளவர்.
புவியியலும் சுற்றுசூழலும் :
பிரம்மபுத்திரா
கோதாவரி
கிருஷ்ணா
காவிரி
நர்மதா
NMMS :
MAT
மகரந்தச் சேர்க்கை அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு
(1) ஆப்பிள்
(2) பூசணி
(3) தக்காளி
(4) பிளம்ஸ்
விடை: (3) தக்காளி
ஆகஸ்ட் 04
நீதிக்கதை
"புதிய யோசனையின் வெ ற்றி" ஒரு கிராமத்தில் சுதன் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் மற்றவர்கள் செய்வதையே செய்து வந்தான். ஆனால் அவனுடை ய தோழி ஸ்மிதா, "புதியதாக யோசித்தால்தான் புதிய வெற்றிகள் கிடைக்கும்" என்று நம்பினாள்.
ஒருநாள் பள்ளியில் ஆசிரியர், "வீட்டில் பயன்படும் ஒரு புதிய கருவியைக் உருவாக்குங்கள்" என்று கூறினார்.
பல மாணவர்கள் ஏற்கனவே இருந்த பொருட்களைப் போவே செய்து வந்தனர். ஆனால் ஸ்மிதா மட்டும், மழை நீரை சேமித்து தாவரங்களுக்கு தானாகவே தண்ணீரை பாய்ச்சும் ஒரு எளிய கருவியை உருவாக்கினாள்.
அதைப் பற்றி புத்தகங்கள் படித்தும், இணையத்தில் தெரிந்துக்கண்டும், ஆசிரியர்களிடம் கேட்டும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டாள்.
அவளது புதிய சிந்தனையும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. போட்டியில் முதல் பரிசையும் பெற்றாள்.
அப்போது ஆசிரியர் கூறினார்: "புதிய விஷயங்களைக் கற்றறிந்து, புதுமையாக யோசிப்பவர்கள்தான் நாளைய உலகை மாற்றுபவர்கள்."
நீதி:
புதுமையாக யோசித்து, புதிய விஷயங்களைக் கற்றறிந்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். அதுவே முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் வழிவகுக்கும்.
இன்றைய செய்திகள்











No comments:
Post a Comment