
மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலான வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், இலவச சிலிண்டர், பரந்தூர் விமான நிலையம், வெற்றி பயண திட்டம் என மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், இலவச மகளிர் பயணத் திட்டம் குறித்து பேசிய முதல்வர் விஜய், சமூக நீதி சிந்தனையுடன் மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிபுடுத்தி, பெருமளவில் பயனளிக்கும் வகையில், வெற்றிப் பயணம் திட்டம் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளில் அக். 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல்கட்டமாக மாநகரம், நகரங்களில் இயங்கும் சாதாரண அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி, மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் விரைவு, எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.
மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் சாதரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தில், வருமான உச்ச வரம்பு அல்லது மேற்கொள்ளும் பயண எண்ணிக்கையிலோ எந்தக் கட்டுப்பாடுகளும் நிர்ணயிக்கப்படாது.
வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகும் வகையிலான பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும்.
இதன் மூலம், மாணவிகள் தொலைதூரக் கல்வி நிலையங்கள் செல்ல, பணியாற்ற, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மேலும், இந்த திட்டத்தின்கீழ், மாற்றுப் பாலினத்தவர்களான திருநர்களும் பயன்பெறலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த தோராயமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி
No comments:
Post a Comment