தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற் நிலையில், ஒவ்வொரு துறைக்கும் தனியாக அறிவிப்புகள் வெளியிட்டு அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2026/08/11/rajmohan-assembly-2026-08-11-13-02-33.jpg)
தமிழக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (ஆகஸ்ட் 24) தொடங்கிய நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பள்ளி மாணவ மாணவிகளுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் த.வெ.க அரசு அமைந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் பொது பட்ஜெட், 2-வது நாளில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற் நிலையில், ஒவ்வொரு துறைக்கும் தனியாக அறிவிப்புகள் வெளியிட்டு அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
இதனிடையே 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கிய சட்டபை கூட்டத்தில் பள்ளி மற்றும் உயர் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், மகிழ்வுடன் முன்னேறு என்ற திட்டத்தின் கீழ் பள்ளியில் மாதத்தில் ஒருமுறை மாணவர்கள் புத்தகப்பை, புத்தகம் மாணவர்கள் கொண்டு வர வேண்டி இல்லாத நோ பேக் டே கடைப்பிடிக்கப்படும். இதன் மூலமாக அவர்களின் புத்தகப்பை சுமை மட்டுமல்லாம மனச்சுமையும் குறையும்.
No comments:
Post a Comment