Subscribe Us

Monday, August 24, 2026

விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு; கல்வி கட்டணம் விலக்கு... அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு

சட்டசபை இன்று கூடிய நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் உயர்கல்வித் துறையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில் ஆளுங்கட்சியான த.வெ.க மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகள்மாணவர்கள் உயர்கல்வி பெற ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.

6000 உதவிப் பேராசிரியர்கள் மூன்ற கட்டங்களாக நியமிக்கப்படுவர்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

"தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை" (NAAC) அங்கீகாரம் பெற்ற தமிழ்நாட்டின் 10 அரசு கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.

கலை அறிவியல் கல்லூரிகளில் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ.36.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியில் மற்றும் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கப்படும்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்காக ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்.

அரசு கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலை வைத்துள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விக் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed