Census பணியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை மீது தாக்குதல்


நெல்லை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணி

இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள கீழநத்தம் கிராமம் செல்விநகர் பகுதியில் நேற்று பகலில் முன்னீர்பள்ளம் யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.

தொழிலாளியான சத்தியமூர்த்தி (வயது 46) என்பவரது வீட்டில் கணக்கெடுப்பு விவரங்களை கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சத்தியமூர்த்தி திடீரென்று சங்கரேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த தலைமை ஆசிரியையின் கணவருக்கும் லேசாக காயம் ஏற்பட்டது.

மத்திய சிறை

இதுகுறித்து சங்கரேஸ்வரி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சத்தியமூர்த்தியை அதிரடியாக கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories