ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-ல் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு 1 மதிப்பெண் வீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி, அவர்களைத் தகுதிபெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2026/10/18/teacher-eligibility-test-tamil-nadu-weightage-marks-for-teachers-2026-10-18-13-23-11.jpg)
சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க கோரிக்கை
சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அனுபவ அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அமைப்பின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
"பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்வு ஆசிரியர்களின் நினைவாற்றலை மட்டுமே சோதிப்பதாக அமைந்திருக்கிறதே தவிர, அவர்களின் கற்பித்தல் அனுபவத்துக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.
அனுபவம் வாய்ந்த ஓர் ஆசிரியர், தனது கற்பித்தல் அனுபவத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான மாணவரை உருவாக்குவது, பிரச்சினைக்குரிய மாணவரை நல்வழிப்படுத்துவது மற்றும் திறனுள்ள மாணவர்களை மேன்மேலும் முன்னேற வைப்பது போன்றவற்றில் திறம்படச் செயல்படுவதே மிகமுக்கியமான தகுதியாகும்.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-ல் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு 1 மதிப்பெண் வீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி, அவர்களைத் தகுதிபெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல, தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிப்பது சரியான முறை கிடையாது. அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணை 60 ஆக ஒரே சீராக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்










No comments:
Post a Comment