ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கான கட்டண நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ மூலமாக ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் தற்போது அதிக அளவில் நடந்து வருகின்றன.
இதுவரை யுபிஐ பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில், ரூ.2,000க்கு அதிகமான யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் எம்.டி.ஆர். கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வரும் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் இந்தியத் தேசியச் செலுத்துதல்கள் கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி, யுபிஐ பணப்பரிமாற்றத்தில் ரூ.3,000க்கு ரூ.12ம், ரூ.50,000க்கு ரூ.200ம், ரூ.75,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 என உச்சவரம்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டணத்தால் சிறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் மீண்டும் ரொக்க பணப் பரிமாற்றத்திற்கு மாற நேரிடும் என்பதால் இந்த கட்டணத்தை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.
குறிப்பாக, வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலனுக்காகவும் குறிப்பிட்ட நபர்-முதல்-வணிகர் இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகித (MDR) நடைமுறை தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும், அதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கான கட்டண நடைமுறை ஒத்திவைப்பு: என்பிசிஐ அறிவிப்பு










No comments:
Post a Comment