சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: 2027ம் ஆண்டுக்கான ஒன்றிய தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்ட மதிப்பீட்டு தேர்வு 2026ல் பங்கு பெற்றவர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களிடம் இருந்து சென்னை, முழுநேரப் பயிற்சிக்கு 225 நபர்கள், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 நபர்கள் மற்றும் மதுரை, முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள், கோயம்புத்தூர், முழு நேர பயிற்சிக்கு 100 நபர்கள் என மொத்தமாக 525 நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.

சென்னை (முழு நேரம், பகுதி நேரம்) மற்றும் கோயம்புத்தூர் (முழு நேரம்), மதுரை (முழு நேரம்) ஆகிய அனைத்து மையங்களுக்கும் கலந்தாய்வு சென்னை-28, பசுமைவழிச்சாலை சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும். கலந்தாய்வில் ஆர்வலர்கள் தங்களது விருப்ப மையங்களை தெரிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகி வரும் 20ம் தேதி முடிவடையும். முதற்கட்ட தெரிவுப் பட்டியல் 22ம் தேதி வெளியிடப்படும்.

கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25, 26, 27ம் தேதிகளில் நடைபெறும். முதல்நிலை தேர்விற்கான பயிற்சி வகுப்பு 28ம் தேதி தொடங்கும். கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், "காஞ்சி" பசுமைவழிச்சாலை, சென்னை-28ல் நடைபெறும். மேலும், விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel