கட்டணம் செலுத்தாத பல்கலை மையங்கள் தவிக்கும் மாணவர்கள்


விருதுநகர் மாவட்டம் லட்சுமிநகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டி மனைவி ரம்யா 33. மதுரை காமராஜ் பல்கலையின் விருதுநகர் தொலைத்துார கல்வி மையத்தில் முதுகலை வரலாறு படித்து 2018 நவம்பரில் இறுதித்தேர்வு எழுதினார். தேர்ச்சி பெற்ற நிலையில் மதிப்பெண் பட்டியலை பல்கலை தர மறுத்துள்ளது. &'கட்டணம் செலுத்தவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டி கூறுகையில், &'&'தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளிவந்தன. சில நாட்கள் கழித்து பல்கலையில் இருந்து அழைப்பு வந்தது. &'நீங்கள் படித்த மையம் உங்களுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை&' என்றனர். ஒரு மாதமாக மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் அலைகிறேன்&'&' என்றார்.இது போன்று தமிழகம்முழுவதும் 143 மையங்களில் இதே நிலை தொடர்வதாக மாணவர்கள் கூறுகின்றனர்.மையத்தினர் ஆதங்கம்மைய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தொலைத்துாரக்கல்வியில் சேரும் அனைவரும் படிப்பை முடிப்பதில்லை. பலர் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவர் அல்லது தேர்வே எழுதாமல் இருப்பர். அவர்களுக்கான நுழைவுக்கட்டணத்தையும் செலுத்த பல்கலை அறிவுறுத்துகிறது. வராதவர்களுக்கான கட்டணத்தை எப்படி செலுத்துவது. இடைநின்றவர்களின் பட்டியலை பல்கலைக்கு அளித்து வருகிறோம்.இதில் தாமதம் ஆனதால் இவ்வாறு நடந்துள்ளது, என்றார்.துணைவேந்தர் எச்சரிக்கைமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது:பெரும்பாலான மையத்தினர் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். மதிப்பெண் பட்டியலை நிறுத்தினால் கட்டண பாக்கியை தருவர் என நம்புகிறோம். 60 சதவீதம் பேருக்கான கட்டண தொகையை செலுத்தினால் மட்டுமே சான்றுகள் வழங்க முடியும். வேண்டும் என்றே செலுத்தாமல் மாணவர்களை எங்களிடம் அனுப்புகின்றனர்.மையத்தினரை எச்சரிக்கவே மதிப்பெண் சான்றுகள் தருவதில்லை என கூறுகிறோம்.உடனடி தேவை என்றால் கொடுத்துவிடுகிறோம். அனைத்து மையத்தினரும் பல்கலையை ஏமாற்றுகின்றனர். இரு வாரத்தில் மட்டும் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளோம். ஹால் டிக்கெட் தரமாட்டோம் என கூறியதால் சில மையத்தினர் பணம் செலுத்துகின்றனர். செலுத்தாத மையங்கள் மூடப்படும், என்றார்.