மிளகுக் கீரையின் மருத்துவ பயன்கள்


பல் பிரச்சினை இதன் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களின் இடுக்குகளில் தங்கும் உணவுப் பொருட்களால் வளரும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. அதனால் தான் இதை நிறைய டூத் பேஸ்ட் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். எனவே இது நம் வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.மாதவிடாய் வலிகள் இந்த மிளகுக்கீரை தசைகளை ரிலாக்ஸ் செய்து மாதவிடாய் வலிகளை போக்குகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கிறது. இதை மாத்திரை வடிவில் கூட மாதவிடாயின் முதல் 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும். பெப்பர் மின்ட் டீ 2-3 கப் தண்ணீரை கொதிக்க விடுங்கள் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் இலைகளை போடுங்கள். இலைகளை நன்றாக கசக்கி போடுங்கள் சில நிமிடங்கள் கொதிக்க விடவும் பிறகு தேன் கலந்து வடிகட்டி குடியுங்கள்.