என்பாதி ஆனவளே

என்பாதி ஆனவளே தேரோட்டம் காணுகின்ற பக்தர்க்கூட் டம்போல ஊரிலுள்ள கண்களெல்லாம் என்மேல தான்விழுது விரும்புகின்ற பூக்கண்டால் பறித்துசூடும் பெண்களைப்போல் பிறர்கவர்ந்து விடுவாரோ பயம்எனக்கு வந்தது உன்நினைவைச் சுமந்துகொண்டு உனக்காக வாழ்கின்றேன் மண்ணோடு போனாலும் மனம்மாற மாட்டேனே
Share:

உண்ணும்சோறு அத்தனையும் நீ

உண்ணும்சோறு அத்தனையும் நீ சின்னசின்ன புன்னகையில் நெஞ்சைஅள்ளிப் போனவளே வண்ணவண்ணப் பூச்சரமே சொக்கவெள்ளிப் பாற்குடமே உண்ணுஞ்சோ றுஅத்தனையும் நீயென்று ஆனதடி உன்னைஅள்ளிக் கட்டிகொள்ள என்நெஞ்சு ஏங்குதடி மனவானில் சிறகடித்துப் பறப்பதுபோல் இருக்குது வான்மகளே நீவந்து என்னிடத்தில் பேசியதால்
Share:

திருமண வாழ்த்து மடல்

வாழ்த்து மடல் இரண்டுமனம் இணைந்து அன்பில் கலப்பது திருமணம் வறண்டநிலம் புதுமழையால் செழித்திடும் தினந்தினம் இரண்டுஇல்லம் ஒன்றாகி புதுஉறவைத் தொடர்ந்திடும் உறவுகளில் கூட்டமைப்பில் இல்வாழ்க்கை வளர்ந்திடும் இருவழிகள் ஒருகாட்சி ஆவதுபோல் மணமக்கள் இருவரையும் ஒருவராக இணைத்துவைக்கும் நன்னாளில் உறவென்று இருந்தவளை …
Share:

வான் மழை

வான் மழை உலகேத்தும் உயர்புலவர் வள்ளுவனார் என்தன்       உயர்வையெல்லாம் கூறுவதைக் கேட்டிருந்தால் உங்கள் வளமான வாழ்வமைய ஏதுவான என்னை       வாயாற வாழ்த்திடுவீர் எல்லோரும் சேர்ந்து பலகாலும் செய்துவரும் சுழற்சிமுறை இதுவே       பகலவனின் ஒளிக்கதிரால் உருக்குளைந்த கடல்நீர் மேல்நோக்கிச் சென…
Share:

மரணத்தைத் துணைகொண்டு

மரணத்தைத் துணைகொண்டு சாலையோரம் நின்றிருந்தாய் பூங்கொத்து போலஉன்னை பாலுண்ணும் பறவைபோல பருகிஉண்டேன் நலம்முழுதும் உன்கோலம் கண்டதனால் வேறுகாட்சி காணவில்லை உன்னைமட்டும் எண்ணுதடி அலைபாயும் என்மனது சிந்தையிலே வந்தவளே பித்துகொள்ள வைத்தவளே இந்திரனின் தேவதையே தோள்சேர வருவாயோ?
Share:

பாவின செய்யுட் கோவை

பாவினச் செய்யுட்கோவை குறள்வெண் செந்துறை கண்கள் காணும் காட்சி எல்லாம் கண்கள் தேடிக் காண்ப தில்லை கண்கள் மட்டும் ஊமை என்றால் காணும் இன்பம் ஏது மில்லை                பா.செ.கோ. பா. 1 கனவுகள் விழித்தெழ கடுமையாய் உழைத்திடு தினந்தினம் மனதினைத் திடமுடன் நடத்திடு                         …
Share:

Categories