Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 29, 2018

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு தகுதி: சென்னை முதலிடம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

அரசு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வுக்குத் தகுதி பெற்ற 25,417 மாணவர்களில் 2,939 பேர் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் அரசு இடங்களுக்கு 28,067 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட 181 விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டன. தகுதியில்லாத 2,469 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.



மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதிவாய்ந்த மொத்த விண்ணப்பங்கள் 25,417 ஆகும். 

சென்னை முதலிடம்: அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2,939 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1390, திருவள்ளூர் 1,344, சேலம் 1317, வேலூர் 1256, மதுரை 1251, கோவை 1158, திருநெல்வேலி 1155, திருச்சி 1144, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 975 பேர் தகுதி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 148 பேர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 204 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 211 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பிற மாநிலங்கள்: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு ஆனால் பிற மாநிலங்களில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களில் கேரளத்தில் இருந்து 52, ஆந்திரத்தில் இருந்து 18 பேர், கர்நாடகத்தில் இருந்து 52, பிற மாநிலங்களில் இருந்து 34 பேர் தகுதி பெற்றுள்ளனர்.