
தமிழக அரசு பள்ளிகளில், விரைவில்,'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்த முறையை மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் செயல்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், முதல் முறையாக, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.ஆசிரியர்கள், கற்றல் வழி மட்டுமின்றி, வீடியோக்கள் மூலமாக பாடங்களை நடத்தலாம். இதற்காக, தமிழக பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்கள்' அமைக்கப்பட உள்ளன.புதிய பாடநுால்களை படித்தால், போட்டி தேர்வில், சுலபமாக வெற்றி அடையலாம். 99 சதவீத கேள்விகள், அதில் இருந்து தான் கேட்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.





