கழுகு மட்டும் உயரமாகப் பறப்பதற்கான தேவை என்ன?

கழுகுகளுக்குப் பார்வை சக்தி அதிகம். கால்கள் வலிமையானவை. நகங்கள் மிகவும் கூர்மையானவை. வேகமாகவும் உயரமாகவும் பறக்கும் ஆற்றல் உண்டு. அதனால் உயரத்தில் பறக்கும்போதே நிலத்தில் ஊர்ந்து செல்லும் விலங்குகளைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.



இரையைக் கண்டதும் பார்வையை ஒருமுகப்படுத்தி, வேகமாக வந்து, கால்களால் பிடித்து, தூக்கிச் சென்றுவிடும். கூர்மையான அலகால் இரையைக் கொத்தி, சாப்பிட்டுவிடும். உயரப் பறப்பதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பதால் கழுகால் உயரமாகப் பறக்க முடிகிறது.
Share:

Total Pageviews

Categories