JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சிபிஎஸ்இ பாடத் திட்ட சர்ச்சை: தலைவர்கள் கண்டனம்!

சிபிஎஸ்இ பள்ளிகளின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்களை முழுமையாக நீக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலில் ஆடைகள்: ஒரு சமூக வரலாறு என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் உள்ள சில பத்திகளில் நாடார் சமூகம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சைக்குரிய அந்தப் பாடத்தை நீக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டனங்கள் எழுந்தன. சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த 16.11.2016இல் தீர்ப்பளித்தது.
இதையடுத்து பாடம் நீக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சர்ச்சைக்குரிய பாடம் நீக்கப்படாமல் இடம்பிடித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் நேற்று (அக்டோபர் 18) கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் வரலாற்றில் நாடார்குல மக்களுக்கு மேன்மையான சிறப்பு இருக்கிறது. பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை கேரளத்தோடு இணைப்பதற்கு வஞ்சக சதி நடந்தபோது, அதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய வீர வரலாறு மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், நத்தானியர், பி.எஸ்.மணி, சிதம்பர நாடார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பெருமக்களுக்கு உண்டு.
நாடார்குல பெருமக்கள் நாஞ்சில் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். ஆனால், அவர்களை பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று சிபிஎஸ்இ பாட நூல் குறிப்பிடுகிறது. மேலும் பழம்பெருமை வாய்ந்த நாடார் சமூக மக்களை மதிப்புக் குறைவான பெயரைக் குறிப்பிட்டு, இழிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்புப் பாட நூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும். மத்திய பாஜக அரசு சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்குல மக்களை தவறாகச் சித்திரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேன்மைமிகு நமது நாடார் சமூக மக்களைக்குறித்து சாதி மற்றும் மோதலும் ஆடை மாற்றமும் என்ற தலைப்பின் கீழ் சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலில் உண்மைக்கு மாறான தகவல்களைக்கொண்ட பாடப்பிரிவினை நீக்க 2016ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை நீக்கம் செய்யாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. சமீப காலமாக சிபிஎஸ்இயின் நடவடிக்கைகள் மிக மோசமாகவும், மாணவர்கள் நலன் மீது அக்கறைக் கொள்ளாமலும் இருந்துவரும் நிலையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு சீர் செய்ய வேண்டும். எந்த ஒரு சமூக மக்களின் மனம் புண்படும் வகையில் அச்சமூகத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பாடத் திட்டங்களில் சேர்ப்பதை தவிர்த்திடவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.