வரும் .2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மீனவர்களுக்கு தேவையான நாவிக் கருவிகளை கொடுப்பதற்கு இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இது மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு தீர்வாக அமையும். மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியதாலேயே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபடவில்லை.
75-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி மனிதனை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி துறையில் இந்தியா அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. மீனவர்களுக்காக இஸ்ரோ உருவாக்கிய உபகரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளில் மீனவர்கள் 4,000 கோடி ரூபாய்க்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்க கூடாது. நன்றாக படித்து விஞ்ஞான அறிவை வளர்த்து கொண்டால் சிறந்த மாணவனாக வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.